தமிழ்நாடு

டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு புதிய பொறுப்பு... தமிழ்நாடு அரசு அறிவித்த புதிய ஆணையத் தலைவராக நியமனம் !

டிஜிபி சங்கர் ஜிவாலை தமிழ்நாடு தீயணைப்பு ஆணையத் தலைவராக நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.

டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு புதிய பொறுப்பு... தமிழ்நாடு அரசு அறிவித்த புதிய ஆணையத் தலைவராக நியமனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு காவல்துறையின் டிஜிபி-யாக இருந்த சங்கர் ஜிவால் இன்று ஓய்வு பெறவுள்ள நிலையில், அவருக்கு புதிய பொறுப்பை வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் படி அவரை தமிழ்நாடு தீயணைப்பு ஆணையத் தலைவராக நியமனம் செய்து தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் தீராஜ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சுமார் 35 ஆண்டு கால காவல் துறையில் சிறப்பாக பணி செய்துள்ள சங்கர் ஜிவாலின் அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக இந்த முடிவை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது. ஏற்கனவே காவல் துறை ஆணையம் போல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு புதிய ஆணையம் ஒன்றை ஏற்படுத்த தமிழாண்டு அரசு முடிவு செய்தது.

டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு புதிய பொறுப்பு... தமிழ்நாடு அரசு அறிவித்த புதிய ஆணையத் தலைவராக நியமனம் !

அடிக்கடி பட்டாசு விபத்துகள் ஏற்பட்டு பெரும் பொருள் இழப்புகள் தவிர்க்க இப்படியான விபத்துகள் மற்றும் பேரழிவு தீ விபத்துகளை முற்றிலும் தடுப்பதற்கு தேவையான வழிமுறைகளை இந்த ஆணையம் வழங்கும். அதை அடிப்படையாக வைத்து புதிய கொள்கை முடிவு எடுக்கப்பட்டு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயங்கும் வகையில் உருக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் தீயணைப்பு துறைக்கு தேவையான காலத்துக்கு ஏற்ப மேம்பட்ட நவீன உபகரணங்கள், கருவிகள் வாங்குவது தொடர்பாகவும் இந்த ஆணையம் ஆலோசனைகள் வழங்கும் என்றும் தமிழ்நாடு அரசு கடந்த 2022ம் ஆண்டில் அறிவித்திருந்தது. அதன்படி தீத்தடுப்பு முறைகளில் புதுமைகளை புகுத்தவும், தொழில்நுட்பங்களை ஏற்படுத்தவும் தமிழக அரசு முடிவு செய்து சங்கர் ஜிவாலை தீ ஆணைய தலைவராக நியமித்துள்ளது.

banner

Related Stories

Related Stories