தமிழ்நாடு

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்! : 20.59 லட்சம் தொடக்கப் பள்ளி மாணாக்கர்கள் பயன்பெறுவர்!

தமிழ்நாட்டின் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்! : 20.59 லட்சம் தொடக்கப் பள்ளி மாணாக்கர்கள் பயன்பெறுவர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் அவர்கள், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் இன்று (26.08.2025) சென்னை, மயிலாப்பூர், புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், உலகிற்கே முன்னோடியான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை, நகர்புற பகுதிகளில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விரிவுபடுத்தி, தொடங்கி வைக்கும் விதமாக, மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கி, தொடங்கி வைத்தார்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்

“நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்கு கிடைத்திருக்கிறது.

பள்ளிகள் தூரமாக இருப்பது மட்டுமல்ல, சிலருடைய குடும்ப சூழலும் இதற்கு காரணமாக இருக்கிறது. இதனை மனதில் கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அரசு உருவாக்கம் செய்தது. முதற்கட்டமாக சில மாநகராட்சி, நகராட்சிகளிலும், தொலைதூரக் கிராமங்களிலும் இத்திட்டம் தொடங்கப்படும்.

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும்” என்று ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 7.5.2022 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விதி 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டார்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்! : 20.59 லட்சம் தொடக்கப் பள்ளி மாணாக்கர்கள் பயன்பெறுவர்!

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் குறிக்கோள்

மாணவ, மாணவியர் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தல், அவர்களின் ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடக்கம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவினை பரிமாறி முதலமைச்சர் அவர்கள், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான 15.9.2022 அன்று தொடங்கி வைத்து, மாணவர்களுடன் உணவருந்தினார்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது முதல் தற்போது வரையிலான செயல்பாடுகள்

முதற்கட்டமாக, தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், இத்திட்டத்தினை செயல்படுத்திட 33.56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 1,14,095 மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

28.02.2023 முதல் இத்திட்டம் நீட்டிக்கப்பட்டு, முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட செயலியின்படி 1,005 நகர்ப்புற மையங்களில் 1,12,883 குழந்தைகளுக்கும், 963 கிராமப்புற மையங்களில் 41,225 குழந்தைகளுக்கும் காலை உணவு வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, 25.8.2023 அன்று நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை அனைத்து அரசு பள்ளிகளுக்கும் தொடங்கி வைக்கப்பட்டது.

மேலும், திருவள்ளூர் மாவட்டம், கீழச்சேரி, புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில், பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாளான 15.7.2024 அன்று நடைபெற்ற விழாவில், ஊரகப் பகுதிகளில் உள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 2,23,536 மாணவ, மாணவியர்கள் தினசரி பயன்பெறும் வகையில் முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தில் 34,987 பள்ளிகளில் 17.53 இலட்சம் மாணவ மாணவியர்கள் பயனடைந்து வருகின்றனர்.

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்த ஆய்வறிக்கையின் வெளிப்பாடு

மதிப்பீடு மற்றும் செயலாக்க துறை, மாநில திட்டக்குழு மற்றும் மூன்றாம் தரப்பு மதிப்பீடு (Third party evaluation) ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாக,, மாணவ, மாணவியரின் வருகை அதிகரித்தல், குழந்தைகளின் கற்றலில் கவனம் மேம்படுதல், 90 சதவிகிதத்திற்கும் அதிகமான குழந்தைகளின் முந்தைய பாடங்களை நினைவு கூர்வது அதிகரித்தல் ஆகிய முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்! : 20.59 லட்சம் தொடக்கப் பள்ளி மாணாக்கர்கள் பயன்பெறுவர்!

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் – மாணவர்கள் மற்றும் பெற்றோர் வரவேற்பு

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ளதோடு, சத்தான உணவினை வழங்குவதன் காரணமாக பள்ளிகளில் மாணவர்களின் வருகையும் அதிகரித்துள்ளது.

வேலைக்குச் செல்லும் தாய்மார்கள், காலை உணவு தயாரிக்கும் நேரம் மற்றும் பொருட்செலவு மீதமாவதோடு மட்டுமல்லாமல், தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் படிப்புத்திறன் அதிகரித்துள்ளதை கண்டு பாராட்டும், மகிழ்ச்சியும் தெரிவித்து வருகின்றனர்.

நகர்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கு விரிவுப்படுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்

2025-2026 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட நிதிநிலை அறிக்கையில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பகுதிகளில் அமைந்துள்ள 2,430 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் இத்திட்டத்தின் கீழ் பயனடையும் வகையில் விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, பள்ளிக்கல்வியை மேலும் பரவலாக்கவும், கற்றலை இனிமையாக்கவும், எல்லாக் குழந்தைகளும் பசியின்றி கல்வியறிவு பெற்றிடவும், தமிழ்நாட்டில் நகர்ப்புற பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு, சென்னை மாவட்டம், மயிலாப்பூர், புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் இன்று நடைபெற்ற விழாவில், நகர்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில்

1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 3.06 இலட்சம் மாணவியர்கள் தினசரி பயன்பெறும் வகையில் நகர்புற பகுதிகளுக்கு விரிவுப்படுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் இன்றையதினம் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் சிறப்பான திட்டங்களைப் பற்றியும், குறிப்பாக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினையும் வெகுவாக பாராட்டி உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories