அறுபடை வீடுகளுக்கு செல்லும் ஆன்மிகப் பயணத்தை இன்று அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு,"தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கின்ற ஆட்சி ஒன்று இருக்கிறது என்றால் இது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சிதான். அறுபடை வீடுகளையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்ய வேண்டும் என்ற முதியவர்கள் கோரிக்கை வைத்து இருந்தார்கள்.
இந்த கோரிக்கையை அடுத்து எவ்வித கட்டணமும் இல்லாமல் உணவு மற்றும் தங்கும் வசதியுடன் முதியவர்களுக்கு ஆன்பிகப் பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரையில் 2,015 பேர் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அதேபோல், எங்கள் ஆட்சியில் 3412 கோவில்கள் குடமுழுக்கு விழாக்கல் மிக மிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. மேலும் குமரக்கோட்டையில் 114 உயரத்தில் முருகன் சிலை நிறுவப்பட உள்ளது.
கேரள மாநிலத்தில் நடைபெறும் ஐயப்ப பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதை பார்த்து மிரண்டு போய் இருக்கிறார் பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன்.
இதற்கு காரணம் இவர்களது மதச்சாயம் வெளிச்சத்திற்கு வந்துவிடுமோ என்ற அச்சம் பா.ஜ.கவுக்கு ஏற்பட்டுள்ளது. 2026 தேர்தலில் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் தொகுதி உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்” என தெரிவித்துள்ளார்.