தமிழ்நாடு

கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில் கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கடந்த ஆண்டில் ரூ.15 ஆயிரத்து 62 கோடி பயிர்க் கடன்கள், 17 இலட்சத்து 37 ஆயிரம் விவசாயிகள் பயன்!

இந்த ஆண்டில் ரூ.17 ஆயிரம் கோடி பயிர்க் கடன்கள், ரூ.3000 கோடி கால்நடை வளர்ப்புக் கடன்கள் வழங்கப்படுகிறது!

இணையம் வழி விண்ணப்பித்த ஒரே நாளில் பயிர்க்கடன்கள் கிடைக்கும்!

​தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு திட்டம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு முன்மாதிரியான ஒரு திட்டத்தைத் தற்போது தொடங்கி வைத்துள்ளார்கள். வேளாண் பெருமக்கள் இணையவழியில் விண்ணப்பித்த அன்றே தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக்கடன் சங்கங்கள் மூலம் பயிர்க்கடன் வழங்கும் திட்டம் தான் அது!

​தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 17.8.2025 அன்று தருமபுரியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் வேளாண்துறை சார்பில் அமைக்கப்பெற்றிருந்த சிறப்பான கண்காட்சி அரங்குகளையும் விவசாயக்கருவிகளையும் பார்வையிட்டு மகிழ்ந்தார்கள். அதிகாரிகளையும், விவசாயிகளையும் பாராட்டினார்கள். அன்றைய விழாவில் இணையவழியில் விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் வழங்கும் சீரிய திட்டத்தைத் தொடங்கி வைத்தார்கள்.

​பயிர்க்கடன்களைப் பெறுவதற்காகத் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களுக்கு இனி விவசாயிகள் நேரில் செல்லத் தேவையில்லை. இணையவழியில் விண்ணப்பிக்கலாம், விண்ணப்பித்த பின் கடன் தொகைக்காக இனி ஒரு வாரகாலம் விவசாயிகள் காத்திருக்கவும் தேவையில்லை. கடன் கோரி இணையத்தில் விண்ணப்பித்த அன்றைய தினமே அவர்களுக்குக் கடன் கிடைத்துவிடும். விவசாயிகளுக்குப் பெரும்பயன் தரும் இத்திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தருமபுரி விழாவில் தொடங்கி வைத்துள்ளார்கள்.

=> கடன்கோரி விண்ணப்பிப்பதில் எளிய நடைமுறை :

​இத்திட்டத்தில் விவசாயி ஒருவர் விண்ணப்பிக்கும் முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. வேளாண் பெருமக்கள் அருகில் உள்ள இ-சேவை மையத்துக்குச் சென்று விண்ணப்பிக்கலாம். தங்களது கூட்டுறவுக் கடன் சங்க உறுப்பினர் எண் அல்லது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சேமிப்புக்கணக்கு எண் இரண்டில் ஒன்றை மட்டும் கொடுத்தால் போதும். இந்த விண்ணப்பம் வருவாய்த்துறை, வேளாண்மைத் துறை ஆகிய இரு துறைகளிலும் சரிபார்க்கப்பட்டு அன்றைய தினமே கடன் தொகையானது வேளாண் பெருமக்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டத்தில் ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை பயிர்க்கடன் வழங்கப்படுகிறது.

​தர்மபுரியில் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டமானது அனைத்து மாவட்டங்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்று முதலமைச்சர் அவர்கள் அன்றைய விழாவில் அறிவித்தார்கள். அதைவிட, பயிர்க்கடன் பெறுவதற்கு எளிமையான முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதைப் போலவே, சுய உதவிக் குழுக்களுக்குக் கடன் வழங்கும் நடைமுறையும், சிறு குறு கடன்களுக்கான நடைமுறையும் எளிமைப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!

=> விண்ணப்பித்த ஒரே நாளில் விவசாயக் கடன் :

தமிழ்நாட்டில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுசங்கங்கள் மூலமாக நெல், கரும்பு, பருத்தி, நிலக்கடலை, மக்காச்சோளம் ஆகியவற்றைப் பயிரிட பயிர்க் கடன்கள் வழங்கப்படுகின்றன. நாட்டில் கடன் வழங்கும் திட்டங்கள் ஏராளமாக உள்ளன. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் அதிகபட்சமாக மூன்று இலட்சம் ரூபாய் வரைகடன் பெற்று, அதனை ஓர் ஆண்டுக்குள் திருப்பிச் செலுத்திவிட்டால் வட்டி செலுத்தவேண்டிய அவசியம் இல்லை என்ற நடைமுறையும் இருக்கிறது. ஆனால், உடனடியாகக் கடன் வழங்கும் திட்டம் என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிடமாடல் ஆட்சியில் தான் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. அதுவும், ஒரே நாளில் கடன் வழங்கும் திட்டமாக இதனை முதலமைச்சர் அவர்கள் வடிவமைத்துள்ளார்கள்.

=> வேளாண் பெருமக்கள் கவலையைப் போக்கியுள்ள திராவிட நாயகர் :

​இதுவரை பயிர்க்கடன்கள் பெறுவதற்கு பட்டா, சிட்டா, அடங்கல், கிராம நிர்வாக அலுவலர் சான்று, குடும்ப அட்டை ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து வழங்க வேண்டும். இதனை வாங்கி விண்ணப்பிப்பதற்குத் தாமதம் ஆகிவிடுகிறது; கடன்பெற மேலும் தாமதம் ஆகிவிடுகிறது என்று வேளாண் பெருமக்கள் கவலையுடன் கூறிவந்தார்கள். வேளாண் பெருமக்கள் கவலையைப் போக்கி இருக்கிறார்கள் திராவிட நாயகர் அவர்கள்.

=> உயர்த்தப்பட்டுள்ள கடன்கள் :

​கடந்த ஆண்டில் 15 ஆயிரத்து 62 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனை 17.37 இலட்சம் விவசாயிகள் பெற்று பயன் அடைந்தார்கள். 4.43 இலட்சம் பேருக்கு 2 ஆயிரத்து 645 கோடி ரூபாய் கால்நடைவளர்ப்புப் பிரிவின் கீழ்கடன்கள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு ரூ.17 ஆயிரம் கோடி வரை பயிர்க்கடன் வழங்கப்படும் என்றும்; 3 ஆயிரம் கோடி ரூபாய் கால்நடை பிரிவின் கீழ் கடன் வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

=> கேழ்வரகு உற்பத்தித் திறனில் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் :

​திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு விவசாயச்சாகுபடி பாசனப்பரப்பும் அதிகரித்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் 457.08 இலட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2020-2021 ஆம் ஆண்டில் எக்டருக்கு 2,835 கிலோவாக இருந்த உணவு தானியப்பயிர்களின் உற்பத்தித்திறன் 2023-24 ஆம் ஆண்டில் 2,904 கிலோவாக அதிகரித்துள்ளது. கேழ்வரகு உற்பத்தித்திறனில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம். மக்காச்சோளம், மொத்த எண்ணெய் வித்துகள் மற்றும் கரும்பு உற்பத்தித்திறனில் இரண்டாம்இடம், குறுதானியங்கள் மற்றும் நிலக்கடலை உற்பத்தித்திறனில் மூன்றாம் இடம் என்ற அளவில் அகில இந்திய அளவில் உணவு தானிய உற்பத்தியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.

​இப்படி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பயிர்க்கடன்கள் வழங்கும் நடைமுறையில் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தி பயிர்க்கடன் தொகையையும் உயர்த்தி வழங்கி விவசாயப் பெருமக்களின் உள்ளங்களைக் குளிரச் செய்துள்ளார்கள். பல மாநிலங்களில் விவசாயிகள் போராடிவரும் சூழ்நிலையில் போராட வேண்டிய அவசியமே இல்லாதவாறு விவசாயிகளுக்குத் தேவையான சலுகைகளை வழங்கி, அவர்களை மகிழ வைத்து விவசாய உற்பத்தியைப் பெருக்குவதில் திராவிட மாடல் அரசுக்கு இணை இந்தியாவில் எங்கும் இல்லை.

banner

Related Stories

Related Stories