தமிழக வெற்றிக் கழகத்தின் 2 ஆவது மாநில மாநாடு நேற்று மதுரையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய விஜய், மக்கள் போற்றும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை விமர்சித்துள்ளார்.
பெண்கள் வாழ்வில் அந்த 1000 ரூபாய் எப்படி பயன்படுகிறது என்று சினிமாவின் உச்சதில் இருந்து அரசியலுக்கு வந்த விஜய்க்கு நிச்சயம் தெரியாதுதான். அதனால்தான் பெண்கள் வாழ்வில் வெளிச்சமாக இருந்து வரும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அவமதித்து இருக்கிறார்.
ஒருவேலை விஜய் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் போது, பெண்களை சந்தித்தால், 1000 ரூபாய் எப்படி உங்கள் வாழ்க்கையில் பயன்பட்டது என்பதை கேட்டு தெரிந்து கொள்ளட்டும்.
மேலும் ஒரு மாநில முதலமைச்சர் என்றும் பார்க்காமல் தரம்தாழ்ந்து விமர்சித்து இருக்கிறார். மக்கள் போற்றும் ஆட்சியை கடுமையாக விமர்சித்து விட்டு, பா.ஜ.க அதிமுகவை மயில் இறகு கொண்டு விமர்சித்து சென்று இருக்கிறோர். இதில் இருந்தே விஜய் யார் என்று மக்களுக்கு நன்கு தெரியும்.
இந்நிலையில் விஜயின் பேச்சுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி கொடுத்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ”ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை, மாபெரும் இயக்கத்தின் தலைவரை, 40 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்வில் ஈடுபட்டு வருபவரை நேற்று அரசியலுக்கு வந்த விஜய் 50 பேர் கூடிவிட்டால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? விஜயின் தராதரம் அவ்வளவு தான். இதற்கு தேர்தலில் மக்களே பதில் சொல்வார்கள்.” என தெரிவித்துள்ளார்.