தமிழ்நாடு

மோடி - அமித்ஷாவின் பிளாக்மெயில் மசோதா : எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைக்கும் ஒன்றிய அரசு!

எதிர்க்கட்சிகளை முடக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள மசோதாவுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.

மோடி - அமித்ஷாவின் பிளாக்மெயில் மசோதா : எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைக்கும் ஒன்றிய அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே எதிர்க்கட்சி மாநிலங்களை பல்வேறு வகையில் ஒடுக்க முயற்சி செய்து வருகிறது. ஆளுநர்களை வைத்து மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இடையூறு செய்து வருகிறது.

மற்றொரு புறம் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளைக் கொண்டு எதிர்க்கட்சி மாநில அமைச்சர்கள் மீது பொய் வழக்குகளை தொடுத்து அவர்களை சிறையில் அடைத்து அடாவடித்தனத்துடன் ஒன்றிய அரசு நடந்து வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சர் பதவியை இப்படித்தான் பறித்தது ஒன்றிய அரசு.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு 30 நாள் சிறைவைக்கப்பட்டால் தகுதி நீக்கம் செய்யும் அரசியல் சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நாளையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், கைது செய்யப்பட்டு 30 நாட்களுக்கு சிறையில் இருந்தாலே பிரதமர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்யும் வகையிலான சட்டத் திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.

இதன்படி, 5 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை விதிக்கும் வகையிலான எந்தவொரு குற்றச்சாட்டின்கீழும் கைதுசெய்யப்பட்டு, 30 நாட்களுக்கு சிறையில் இருந்தால், 31-ஆவது நாளில் அவர்களை ஆளுநர் பதவிநீக்கம் செய்ய இந்த மசோதா வகை செய்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்களை அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கில், ஜனநாயக விரோதமான இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.

இந்த மசோதாவை உடனே திரும்ப பெற வேண்டும் எனக் கூறி, மசோதாவின் நகல்களையும் அவர்கள் கிழித்தெறிந்தனர். இது, மோடி-அமித்ஷாவின் பிளாக்மெயில் மசோதா என்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குற்றம்சாட்டினர்.

banner

Related Stories

Related Stories