79 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றினார்.
அதேபோல், சென்னையில் உள்ள கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
மாநிலம் முழுவதும், மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர். இந்நிலையில் ஆதிக்கத்தை எந்நாளும் எதிர்த்து நிற்போம் - விடுதலைத் திருநாள் போற்றிடுவோம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூகவலைதளத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,”இந்திய ஒன்றியத்தின் 79-ஆவது விடுதலைத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜனநாயகம் - மதச்சார்பின்மை - சமத்துவம் - சகோதரத்துவம் - தன்னாட்சி அமைப்புகளின் சுதந்திரம் - வாக்குரிமை உட்பட நாட்டு விடுதலையின் அடித்தளங்களைப் பேணிக்காக்க இந்நாளில் உறுதியேற்போம்.
விடுதலைக்காகப் போராடிய வீரர்கள் - உயிர்நீத்த தியாகிகளை நினைவுகூர்வோம்.ஆதிக்கத்தை எந்நாளும் எதிர்த்து நிற்போம் - விடுதலைத் திருநாள் போற்றிடுவோம்" என தெரிவித்துள்ளார்.