மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை 2015 இல் ஒப்புதல் அளிக்கப்பட்டு 2019-20 ஒன்றிய பட்ஜெட்டில் ரூ.1264 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும் அதன் கட்டுமானம் மற்றும் செயல்பாட்டில் தாமதம் ஏற்பட்டதற்கான காரணம்
திட்டத்தை விரைவுபடுத்த அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமா மற்றும் அது எப்போது முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது?
உள்நாட்டு உர உற்பத்தியை மேம்படுத்த ஒன்றிய அரசிடம் உள்ள திட்டம் என்ன?
வேதியியல் மற்றும் உரங்கள் நிலைக்குழு பரிந்துரையின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள கூடுதல் யூரியா உற்பத்தி அலகுகள் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என மாநிலங்கலவையில் திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார்.
காலாவதியான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் உர உற்பத்தி ஆலைகளை நவீனமயமாக்க அரசாங்கத்திடம் உள்ள திட்டங்கள் என்ன மற்றும் உள்நாட்டு உற்பத்திக்கான திட்டமிடப்பட்ட பங்களிப்பு என்ன என்றும் அவர் கேட்டுள்ளார்.
நியாயவிலை கடைகளில் கடலை எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்
தேங்காய் மற்றும் கடலை பயிர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவ அரசு நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் வழங்க திமுக மாநிலங்கலவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார். இது மக்களுக்கு மலிவு விலையில் சமையல் எண்ணெய்கள் கிடைக்க வழிவகை செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.