தமிழ்நாடு

”படிப்பு மிக மிக முக்கியம் அதை விட்டு விடாதீர்கள்” : மாணவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுரை!

College Life எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவு படிப்பு மிக, மிக முக்கியம் அதை விட்டு விடாதீர்கள்.

”படிப்பு மிக மிக முக்கியம் அதை  விட்டு விடாதீர்கள்” : மாணவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி உள்பட 3.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலைஞர் கலையரங்கத்தினை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை :-

நம்முடைய மாநிலங்களவை உறுப்பினர் அண்ணன் வில்சன் அவர்களுடைய பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, அதுமட்டும் அல்லாமல், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும நிதி ஆகியவற்றின் மூலம், இந்த பெரும்பாக்கம் அரசுக் கல்லூரியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ‘கலைஞர் கலையரங்கத்தை உங்களோடு சேர்ந்து திறந்து வைப்பதில் மிகுந்த பெருமையடைகின்றேன், மகிழ்ச்சி அடைகின்றேன்.

இந்த நேரத்தில் நாம் அனைவரும் நம்முடைய மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் அவர்களுக்கு நம்முடைய பாராட்டுக்களை நாம் தெரிவித்தாக வேண்டும். ஏனென்றால் அவருக்கு ஒதுக்கப்படுகின்ற தொகுதி மேம்பாட்டு நிதி அனைத்தையும் கல்வி, விளையாட்டு மேம்பாடு, பெண்களுடைய முன்னேற்றம் என்று இந்த பணிகளுக்காகவே அதை முழுவதும் செலவழித்திருக்கிறார். அவர் கூறியது போல கொளத்தூர் தொகுதியில் பள்ளிக்கூடம் கட்டுமானப் பணிக்காக 2 கோடியே 35 இலட்சம், இந்த கல்லூரிக்காக 2 கோடி ரூபாய், சென்னை ராணி மேரி மகளிர் கல்லூரிக்கு 5 கோடி ரூபாய், திருவண்ணமாலை நகரத்தில் மக்களுக்கு பயன்படுகின்ற வகையில் ஒரு ஆடிட்டோரியம் 1.5 கோடி ரூபாய் அதே போல் என்னுடைய சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியில் ஒரு சமுதாய நலக்கூடம் கட்ட 3 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கின்றார். இப்படி தன்னுடைய ஒட்டுமொத்த தொகுதி மேம்பாட்டு நிதியையும் எளிய மக்கள் பயன்பெறுகின்ற வகையில் ஒதுக்கீடு செய்கின்ற அண்ணன் வில்சன் அவர்களுக்குக்கு நாம் அனைவரும் நம்முடைய பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும்.

அதே மாதிரி, இன்றைக்கு கிட்டத்தட்ட 262 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழாவும் நடக்க இருக்கின்றது. இந்த ஆடிட்டோரியம் கட்டுவதற்க்கு தன்னுடைய எம்.பி நிதியை ஒதுக்கிய அவருக்கு, மாணவ, மாணவிகள் உங்களின் சார்பாக என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நீங்கள் நினைக்கலாம், மாணவர்கள் சார்பாக நான் எப்படி நன்றி சொல்லலாம்னு நினைக்கலாம். உங்களைப் போல நானும் ஒரு மாணவன் தான். நான் பெருமையாக கூறுவேன் தந்தை பெரியாருடைய மாணவன், அண்ணல் அம்பேத்கருடைய மாணவன். பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞருடைய மாணவன் என்கின்ற பெருமையோடு இன்றைக்கு அந்த நன்றியை நான் சொல்லிக் கொள்கிறேன்.

எத்தனையோ நிகழ்ச்சிகளுக்குப் போனாலும் கல்லூரி மாணவர்கள் உங்களைப் பார்க்கும்போது ஒரு கூடுதல் உற்சாகம் ஏற்படுகிறது. குறிப்பாக, இந்த பெரும்பாக்கம் அரசு கலை, அறிவியல் கல்லூரியுடைய மாணவர்கள், உங்களோட எனர்ஜி வேற லெவல்ல இருக்கின்றது. அதற்கு என்னுடைய பாராட்டுக்கள். அந்த அளவுக்கு ஆரவாரத்தோட இருக்கின்றீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். கலைஞர் பேரில் அமைந்திருக்கக்கூடிய இந்த கலையரங்கத்தை திறக்கின்ற இந்த வாய்ப்பை அளித்ததற்கு நான் மீண்டும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

இந்த விழாவில் உங்களை எல்லாம் பார்க்கின்றபோது, எனக்கு என்னுடைய கல்லூரி நாட்கள்தான் நினைவுக்கு வருகின்றது. இந்த மாதிரி நிகழ்ச்சிகள் நடக்கும்போது என்ன ஒரு கூடுதல் மகிழ்ச்சி என்னவென்றால், உங்களுக்கெல்லாம் ஒரு Extra Benefit குறைஞ்சது 2 அல்லது 3 Class-ஆவது Cut அடித்து விட்டுதான் வந்திருப்பீர்கள். இல்லை, Volunteer- என்று OD சொல்லிவிட்டு வந்திருக்கலாம். Class Cut அடிச்ச மகிழ்ச்சியும் சேர்ந்து தான் உங்க முகங்களில் தெரிகிறது. College Life எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவு படிப்பு மிக, மிக முக்கியம் அதை விட்டு விடாதீர்கள்.

2016-ல தமிழ்நாடு குடிசை மாற்று வாரியக் குடியிருப்புல 16 மாணவிகளோட தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரியில இன்றைக்கு கிட்டத்தட்ட 1,300 பேர் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தக்கல்லூரிக்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு தொடர்ந்து பல்வேறு வசதிகளை செய்து கொடித்திருக்கிறது. 2021-ல் ரூபாய் 3 கோடி மதிப்புல 12 Class Rooms, 2 Lab Rooms-உடன் கூடிய Main Block-ஐ நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.

இந்தக் கல்லூரியோட Infrastructure-ஐ மேம்படுத்தணும்னு சுமார் 8 கோடி ரூபாய் மதிப்புல கூடுதல் இணைப்புக் கட்டடம் கட்டுறதுக்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இங்க படிக்கக்கூடிய 75 சதவீதம் மாணவர்கள், முதல் தலைமுறையாக கல்லூரிக்கு வருகிறீர்கள் என்று சொன்னார்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள்.

அதுமட்டுமில்ல, அதிகமான ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்த பிள்ளைகள் படிக்கின்ற கல்லூரி இந்த சிறப்பு வாய்ந்த கல்லூரி. உங்களோட தாத்தா, பாட்டிக்கு, உங்களுடைய அம்மா அப்பாவுக்கு கிடைக்காத கல்வி இன்றைக்கு உங்களுக்கு கிடைத்திருக்கிறது. இது சாதாரணமா கிடைக்கல. இதுக்குப் பின்னாடி, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற நம்முடைய தலைவர்களுடைய போராட்டமும் உழைப்பும் இருக்கின்றது. இதை உணர்ந்து நீங்க படிக்கணும்னு நான் உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கின்றேன்.

இந்த அரங்கத்துல, இன்னொரு கூடுதல் சிறப்பு என்னவென்றால், மாணவர்களை விட மாணவிகள் அதிகமா இருக்கின்றீர்கள். இங்க இருக்கக்கூடிய மாணவிகள் உங்களையெல்லாம் பார்க்கும்போது, உங்களுடைய பெற்றோர்களை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையாவும் இருக்கின்றது, மகிழ்ச்சியாகவும் இருக்கின்றது.

ஏனென்றால், ஒரு காலத்தில், உங்களுக்கு தெரியும். பெண் பிள்ளைகளை படிக்க வைக்க மாட்டார்கள். ஒரு 100 வருடத்திற்கு முன்னால் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அனுமதி கிடையாது. நாம் அதையெல்லாம் சண்டைபோட்டு, போராடி இன்றைக்கு இந்த நிலைமைக்கு வந்திருக்கின்றோம். அடுத்த வீட்டுக்குப் போற பொண்ணுக்கு, கல்வி எதுக்குன்னு ஒரு 50 வருடத்திற்கு முன்னாடி பிற்போக்குத்தனமா பேசிக்கொண்டு இருந்தார்கள். ஆனா, இன்றைக்கு அந்த நிலைமை மாறி இருக்கின்றது. பெண் பிள்ளைகள் படிக்கணும் என்கின்ற எண்ணம் இன்றைக்கு பெற்றோர்களிடம் அதிகமாவே வந்திருக்கின்றது.

ஒரு ஆண் படித்தால் அது அந்த குடும்பத்துக்கு மட்டும் தான் உதவும். அதுவே, ஒரு பெண் படித்தால் அது ஒட்டுமொத்த சமூகத்திற்கே அது உதவியாக இருக்கும். ஆகவே, இங்கே இருக்கின்ற மாணவிகள் நீங்கள் ஒவ்வொருவரும், உங்க அடுத்த தலைமுறைக்கு ரோல் மாடலா இருக்க வேண்டும்.

கல்விக்காக நம் திராவிட மாடல் அரசு மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கைகளால, தமிழ்நாட்டுல இன்னைக்கு பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரி படிக்கின்ற சதவீதம் எவ்வளவு தெரியுமா இன்றைக்கு இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் நம்பர் 1 கிட்டத்தட்ட 75 சதவீதம் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம்முடைய அரசு 75 சதவீதத்தை 100 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி கொண்டு வருகிறார்கள்.

குறிப்பாக, அரசுப்பள்ளியில் படித்து உயர் கல்வி படிக்கக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டம் மூலம் ஒவ்வொரு மாதமும் 1,000 ரூபாய் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கொடுக்கின்றார். இந்த 2 திட்டங்களிலும், தமிழ்நாடு முழுக்க ஒவ்வொரு வருடமும் 8 லட்சம் பேர் பயன்பெற்று வருகிறார்கள்.

”படிப்பு மிக மிக முக்கியம் அதை  விட்டு விடாதீர்கள்” : மாணவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுரை!

புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 4 வருடங்களாக, இந்தக் கல்லூரியில் மட்டும் சுமார் 1,200 மாணவிகள், மாதம் 1,000 ரூபாய் ஊக்கத்தொகை பெற்று வருகிறார்கள்.

அதே மாதிரி தமிழ்ப்புதல்வன் திட்டம் தொடங்கி 2 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த இரண்டு வருடத்தில் சுமார் 500 மாணவர்களுக்கு, மாதம் 1000 ரூபாய் கல்வி ஊக்கத்தொகை

தருகிறார்கள் நம்முடைய முதலமைச்சர் அவர்கள். கல்லூரி முடிச்சதும் வேலைக்கு போகணும்னா, பொதுவாக பெரிய பெரிய கல்லூரிகள்ல படிக்கணும்னு சொல்லுவாங்க. பெரிய பெரிய கல்லூரிகள்ல மட்டுமில்ல, நம்முடைய பெரும்பாக்கம் கல்லூரியில படிச்சாலும் உடனே வேலைக்கு போகலாம்ங்கிற நம்பிக்கையை, நிலைமையை நம்முடைய முதலமைச்சர் அவர்களும் இந்த அரசும் உருவாக்கி காட்டியிருக்கின்றார்கள்.

குறிப்பாக, நான் முதல்வன் திட்டம் மூலமாக இந்தக் கல்லூரியில் ஒவ்வொரு வருடமும் 1000 மாணவர்களுக்கு திறன் பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமில்ல, ‘நான் முதல்வன்’ வேலைவாய்ப்பு முகாம் மூலமாக, இந்தக்கல்லூரியைச் சேர்ந்த சுமார் 400 மாணவர்கள் பல MNC நிறுவனங்களில் பெரிய, பெரிய வேலைகளில் சேர்ந்து இருக்கின்றார்கள். இங்கே இருக்கக்கூடிய நீங்களும், அதே மாதிரி, வேலைவாய்ப்பை பெறணும்னு தான் நம்முடைய திராவிட மாடல் அரசும், நானும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் உழைச்சுட்டு இருக்கின்றோம். அதற்கு உங்களுடைய ஒத்துழைப்பும் மிக, மிக அவசியம். ஆகவே, நீங்க செய்ய வேண்டியது ஒன்னே ஒன்னு தான். நல்லா படிங்க. படிப்புல மட்டும் இல்லாம விளையாட்டுலயும் உங்க Concentration-அ ஈடுபடுங்கள்.

விளையாட்டுங்கிறது உங்க உடல் நலத்துக்கு மட்டுமல்ல, மனநலத்திற்கும், அறிவு வளர்ச்சிக்கும் மிக, மிக முக்கியம். இந்தக் கல்லூரியில நிறைய விளையாட்டு வீரர்கள் உருவாகி இருக்கிறார்கள் என்று சொன்னார்கள். கேட்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தக்கல்லூரி மாணவர் தம்பி ஆகாஷ், போன வருடம் நடந்த National Level Boxing Championship-ல Gold medal அடிச்சு இருக்கின்றார்.

அதே போல், தங்கைகள் தாரணி, ராஜலட்சுமி, தம்பி சக்திவேஷ் போன்றவர்கள் சிலம்பம் விளையாட்டுல இன்றைக்கும் பல சாதனைகளை தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார்கள். இதெல்லாம் கல்லூரிக்கு மட்டுமல்ல, நம்முடைய மாநிலத்திற்கே மிகப் பெரிய பெருமை.

நம்முடைய விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பாக முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை ஒவ்வொரு வருடமும் நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆகவே, இங்கே ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்கள், SDAT இணையத்தளத்துல வர்ற 16-ஆம் தேதிக்குள்ள முன் பதிவு செய்து கொள்ளுங்கள். உங்களோட கல்வித்திறமையையும், பன்முகத்திறமையையும் நீங்க தொடர்ந்து வளர்த்துகிட்டே இருங்கள்.

உங்க கல்லூரியோட வளர்ச்சிக்கும், மாணவர்கள் உங்களோட முன்னேற்றத்துக்கும் நம்முடைய திராவிட மாடல் அரசு என்றைக்கும் துணை நிற்கும்.

எந்த கல்லூரியாக இருந்தாலும், அங்க இருக்கின்ற ஆடிட்டோரியத்திற்கும் மாணவர்களுக்கும் ஒரு sentimental attachment இருக்கும். ஏனென்றால் Class room-ஐ விட உங்களுக்கு பல மறக்க முடியாத நினைவுகள தரப்போகிறது இந்த ஆடிட்டோரியம் தான். ஆகவே, இன்றைக்கு நாங்க திறந்து வைத்துள்ள இந்த ஆடிட்டோரியமும் உங்களுக்கு பல அழிக்க முடியாத Memories-ஐ கண்டிப்பாக தரும் என்று நாங்கள் நம்புகின்றோம். இன்றைக்கு 262 மாணவர்கள் பட்டம் பெற இருக்கின்றீர்கள்.

நான் இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு இன்னொரு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும். பட்டமளிப்பு விழாவில் என்னால் கலந்து கொள்ள முடியாத சூழல். எனினும், இன்றைக்கு பட்டம் பெறுகின்ற உங்களோட எதிர்காலம் இன்னும் சிறப்பாக அமைய வேண்டும்.

பட்டம் வாங்குறவங்க உட்பட இங்க இருக்கக்கூடிய அத்தனை மாணவர்களும் வாழ்க்கையில பல்வேறு உயரங்களைத் தொடுறதுக்கு என்னுடைய அன்பையும், வாழ்த்தையும் தெரிவித்து இந்த வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories