தமிழ்நாடு

ரூ.119.14 கோடி : தாம்பரத்தில் புதிய அரசு தலைமை மருத்துவமனை - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.119.14 கோடி செலவில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ரூ.119.14 கோடி : தாம்பரத்தில் புதிய அரசு தலைமை மருத்துவமனை - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (9.8.2025) தாம்பரத்தில் நடைபெற்ற அரசு விழாவில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 110 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தாம்பரம் – மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக் கட்டடம், 7 கோடியே 24 இலட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை - புறநகர் பிரிவு மற்றும் 1 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் மற்றும் 3 நகர்ப்புற துணை சுகாதார நிலையங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 20,021 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை தாம்பரம் – அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக் கட்டடம்

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை 213 படுக்கைகள் வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 1282 வெளிநோயாளிகள், 136 உள்நோயாளிகள், மாதத்திற்கு 187 பிரசவங்கள், 1880 பெரிய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

2021-2022 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையில், தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தாம்பரம் அரசு மருத்துவமனை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் 10.01.2023 நாளிட்ட அரசாணையின்படி தாம்பரம் அரசு மருத்துவமனை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. மேலும், அம்மருத்துவமனையை வலுப்படுத்தும் பொருட்டு 110 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள தாம்பரம் – அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக் கட்டடத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

இப்புதிய மருத்துவமனையில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் தளவாடப்பொருட்களுடன் தரைத்தளத்தில் அவசர சிகிக்சை பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு, ஊடுகதிர் பிரிவு, C.T ஸ்கேன் MRI ஸ்கேன் கருவிகள், முதல் தளத்தில் வெளிநோயாளிகள் பிரிவு, அறுவை அரங்கு, இரண்டாம் தளத்தில், மகப்பேறு பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, அறுவை சிகிச்சை முந்தைய மற்றும் பின் கவனிப்பு பிரிவு, மூன்றாம் தளத்தில் டையாலிசிஸ் பிரிவு, இரத்தவங்கி, உள்நோயாளிகள் பிரிவு, நான்காம் தளத்தில் உள்நோயாளிகள் பிரிவு, தீக்காய சிகிச்சைப் பிரிவு, ஆய்வகம், ஐந்தாம் தளத்தில் அறுவை அரங்கு, தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் ஆறாம் தளத்தில் வெளிநோயாளிகள் பிரிவு ஆகிய பல்வேறு பிரிவுகளுடன் இம்மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை - புறநகர் பிரிவு

2024-25ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையில், சென்னையில் உள்ள தாம்பரம் அரசு மருத்துவமனையில் பல்நோக்கு சிறப்பு பல் மருத்துவப் பிரிவு உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தாம்பரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் 7.24 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை - புறநகர் பிரிவினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் திறந்து வைத்தார். இது சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை (TNGDCH) நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் "புறநகர் பிரிவு" ஆக இருக்கும்.

இந்த தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை - புறநகர் பிரிவில் சிறப்பு அம்சமாக அனைத்து வசதிகளும் கொண்ட 14 Dental Chairs, ஒரு முழு வாய் கதிர்வீச்சு கருவி (Orthopantomogram Machine) மற்றும் மின்னணு பல் ஊடுகதிர் கருவி (RVG) அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையின் முதல் தளத்தில் Smart Board வசதியுடன் சிறப்பு பயிற்சி மையம், சிறப்பு சிகிச்சைக்கு தேவைப்படும் பல சிறப்பு சிகிச்சை கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதுடன், பல்வேறு சிறப்பு சிகிச்சைகளுக்காக தனித்தனி சிகிச்சை அறைகள், பயனாளிகள் காத்திருக்கும் அறைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இப்புதிய மருத்துவமனைக்கு ஆறு சிறப்பு பல் சிகிச்சை மருத்துவர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

ரூ.119.14 கோடி : தாம்பரத்தில் புதிய அரசு தலைமை மருத்துவமனை - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சிறப்பு சிகிச்சைகள்

இந்த பல் மருத்துவமனையில், அடிப்படை பல் சிகிச்சை சேவைகளுடன் கூடுதலாக, ஈறு நோய்கள் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை, செயற்கை பல் பொருத்தும் சிகிச்சை, வாய்முக தாடை அறுவை சிகிச்சை, பல் சீரமைப்பு சிகிச்சை, குழந்தைகளுக்கான சிறப்பு பல் பராமரிப்பு மற்றும் தடுப்பு சிகிச்சைகள், பல் பாதுகாப்பு மற்றும் வேர் சிகிச்சை போன்ற சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படும்.

ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் மற்றும் 3 நகர்ப்புற துணை சுகாதார நிலையங்கள் தாம்பரத்தில் 1 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம்; தாம்பரம் நகராட்சிக்குட்பட்ட பம்மல் - திருநகரிலுள்ள மூவேந்தர் தெரு, பவணந்தியார் பூங்கா, CTO காலனி ஆகிய இடங்களில் தலா 30 இலட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 90 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மூன்று நகர்ப்புற துணை சுகாதார நிலையங்கள் ஆகியவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்குதல்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கழக அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை 205.56 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணைகள் 41,858 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாநகர் சூழ் பகுதி மற்றும் நகர்புற பகுதிகளில் சிறப்பு வரன்முறைத் திட்டம் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ் 1672.52 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பட்டாக்களை 20,021 பயனாளிகளுக்கு வழங்கினார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் 21.2.2025 மற்றும் 26.4.2025 நாளிட்ட அரசாணையின்படி 9321 பட்டாக்கள், அனகாபுத்தூர் மற்றும் மதுராந்தகம் நகர நிலவரித் திட்டத்தில் 5461 பட்டாக்கள், நில நிர்வாக ஆணையர் அவர்களின் 23.6.2025 ஆம் நாளிட்ட சுற்றறிக்கையின்படி இணையவழியில் 2764 பட்டாக்கள், நில நிர்வாக ஆணையர் அவர்களின் 20.9.2018-ஆம் நாளிட்ட கடிதத்தின்படி சர்கார்/நஞ்சை/புஞ்சை/மனை-ரயத்து மனையாக மாற்றம் செய்யப்பட்ட 353 பட்டாக்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் 2122 பட்டாக்கள், என மொத்தம் 20,021 பட்டாக்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

banner

Related Stories

Related Stories