தமிழ்நாடு

நாட்டில் எத்தனை வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன? : நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி கிரிராஜன் கேள்வி!

ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பலனடையும் வகையில் குறைந்த கட்டணத்தில் வந்தே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுமா என ரயில்வே அமைச்சரிடம், திமுக எம்.பி. கிரிராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.

நாட்டில் எத்தனை வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன? : நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி கிரிராஜன் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 21 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத் தொடரில், திமுக எம்.பி. இரா.கிரிராஜன், சென்னையிலிருந்து வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட பெருநகரங்களுக்கு வந்தே மெட்ரோ ரயில்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதா? அவற்றை ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயணிக்கும் வகையில் குறைந்த கட்டணத்தில் இயக்க திட்டம் உள்ளதா? நாடு முழுவதும் எத்தனை வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன? என்ற கேள்விகளை ரயில்வே துறை அமைச்சரிடம் எழுப்பியிருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்திய ரயில்வே துறையால் 4 நமோ பாரத் என பெயர் மாற்றப்பட்ட வந்தே மெட்ரோ விரைவு ரயில் சேவைகளும், 144 வந்தே பாரத் சேவைகள் செயல்பட்டு வருகின்றன என்றும் பதில் தெரிவித்துள்ளார். அவற்றில் 16 வந்தே பாரத் சேவைகள் தமிழ்நாட்டிலிருந்து இயக்கப்படுவதாகவும், அதன்மூலம் சென்னை, வேலூர்,விழுப்புரம் உள்ளிட்டபல்வேறு நிலையங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகவும் கூறியுள்ளார்.

புதிதாக நமோ பாரத் எனப்படும் வந்தே மெட்ரோ விரைவு ரயில் சேவைகளை அறிமுகப்படுத்துவது குறித்த கேள்விக்கு, மாநில எல்லைகளைத் தாண்டிச் செல்லும்போது, நெட்வொர்க் தேவைக்கேற்ப ரயில்கள் அறிமுகப்படுத்தப்படுவதாகவும், அவை போக்குவரத்து சாதகத்தன்மை, செயல்பாட்டு சாத்தியக்கூறு ஆகியவற்றுக்கு உட்பட்டு, இந்திய ரயில்வே செயல்படுத்தும் தொடர் செயல்முறையாகும் என்றும் ரயில்வே துறை அமைச்சர், திமுக எம்.பி. கிரிராஜனுக்கு பதிலளித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories