தமிழ்நாடு

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் அடுத்த நடவடிக்கை! : 2 புதிய அங்கன்வாடி மையங்கள் திறப்பு!

சென்னை நடுநிலைப் பள்ளியில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.6.60 கோடியில் கட்டப்பட்ட 2 அங்கன்வாடி குழந்தைகள் மையங்களுடன் கூடிய கூடுதல் பள்ளிக் கட்டடத்தினை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர்.

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் அடுத்த நடவடிக்கை! : 2 புதிய அங்கன்வாடி மையங்கள் திறப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (5.8.2025) மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி, அடையாறு மண்டலம், ராஜா அண்ணாமலையுரம், நாராயணசாமி தோட்டத்தில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 6.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு அங்கன்வாடி குழந்தைகள் மையங்களுடன் கூடிய கூடுதல் பள்ளிக் கட்டடத்தினை திறந்து வைத்தார்.

நாராயணசாமி தோட்ட சென்னை நடுநிலைப் பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 8 ஆம் வகுப்பு வரை 419 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ஏற்கனவே அமைந்திருந்த பழுதடைந்த பள்ளிக் கட்டடம் மற்றும் இரண்டு அங்கன்வாடி குழந்தைகள் மையக் கட்டடங்களை இடித்துவிட்டு;

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் அடுத்த நடவடிக்கை! : 2 புதிய அங்கன்வாடி மையங்கள் திறப்பு!

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் வாயிலாக 6.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 23,630 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன், இரண்டு அங்கன்வாடி குழந்தைகள் மையங்களுடன் கூடிய கூடுதல் பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

கூடுதல் பள்ளிக் கட்டடத்தின் தரைத்தளத்தில் தலைமையாசிரியர் அறை, 2 வகுப்பறைகள், 2 அங்கன்வாடி குழந்தைகள் மையக் கட்டடங்கள், சமையலறை, ஆகியவையும், முதல் தளத்தில் 9 வகுப்பறைகள், கணிப்பொறி ஆய்வுக்கூடம், ஆசிரியர் ஓய்வறை ஆகியவையும்;

இரண்டாம் தளத்தில் 9 வகுப்பறைகள், அறிவியல் ஆய்வுக் கூடம், ஆசிரியர் ஓய்வறை ஆகிவற்றுடன் 2 நூலகங்கள், வாசிப்பு இயக்க நூலகம் மற்றும் மாணவ, மாணவிகளுக்கான கழிப்பறைகளுடன் இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories