இந்தியா

மேக வெடிப்பால் உத்தரகாண்டில் பெரும் வெள்ளம் : அடித்துச் செல்லப்பட்ட வீடுகள் - அச்சத்தில் மக்கள்!

உத்தர்கண்டில் ஏற்பட்ட மேக வெடிப்பு பேரழிவில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேக வெடிப்பால் உத்தரகாண்டில் பெரும் வெள்ளம் : அடித்துச் செல்லப்பட்ட வீடுகள் - அச்சத்தில் மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தராகண்ட் மாநிலத்தில் அதிகனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்நிலையில் உத்தர்காசி மலைப்பகுதியில் மேக வெடிப்பு ஏற்பட்டு சேறும் வெள்ளமும் பெருக்கெடுத்து வந்ததில் கீர் காத் (Kheer Gadh) ஆற்றில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் கண் இமைக்கும் நேரத்தில் தாராலி மலைச்சரிவில் இருந்த ஏராளமான குடியிருப்புகளும் கட்டிடங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

வெள்ளம் பெருக்கெடுத்து வந்த பாதை நெடுகிலும் கட்டிடங்கள் இருந்த இடம் தெரியாமல் சேற்று மண் மட்டுமே நிரவிக்கிடக்கிறது.

இதில் 50க்கும் மேற்பட்டோர் சேற்றுக்குள் புதையுண்டு மாயமாகினர். இதுவரை 17 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக உத்தர்காண்ட் அரசு தெரிவித்துள்ளது. மீட்பு பணிக்காக உத்தர்காசிக்கு ராணுவம் சென்றுள்ளது. சேற்றுக்குள் புதையுண்டவர்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த பேரழிவில் ஒரு சிலர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இருப்பினும் நிலச்சரிவு, வெள்ளத்தில் குடியிருப்புகளே அடித்து செல்லப்பட்டதால், உயிரிழப்பும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணியில் தேசிய, மாநில பேரிடர் குழுவுடன் ராணுவத்தினரும் இணைந்துள்ளனர்.

இந்நிலையில் மேக வெடிப்பால் ஏற்பட்ட நிலச்சரிவு பேரழிவில் உயிரிழந்தவர்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”உத்தரகண்ட் மாநிலம் தாராலியில் ஏற்பட்ட மேக வெடிப்பால் ஏற்பட்ட கடுமையான பேரழிவில் பலர் உயிரிழந்ததாகவும், பலர் காணாமல் போனதாகவும் செய்திகள் மிகவும் வருத்தத்தையும் கவலையையும் தருகின்றன.

நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு நிர்வாகத்திடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்." என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories