தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ஏராளமான விமானங்கள் தாமதம்... பயணிகள் அவதி : விவரம் உள்ளே !

சென்னை விமான நிலையத்தில் ஏராளமான விமானங்கள் தாமதம்... பயணிகள் அவதி : விவரம் உள்ளே !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மொரிசியஸ் நாட்டிலிருந்து ஏர் மொரிசியஸ் பயணிகள் விமானம், அதிகாலை 1.50 மணிக்கு, சென்னைக்கு வந்துவிட்டு, மீண்டும் சென்னையில் இருந்து, அதிகாலை 3.35 மணிக்கு, மொரிசியஸ் புறப்பட்டுச் செல்லும். ஆனால் மொரிசியஸிலிருந்து சென்னை வர வேண்டிய, ஏர் மொரிசியஸ் பயணிகள் விமானம், இன்று 6 மணி நேரம் தாமதமாக, காலை 7.50 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தது.

இதை அடுத்து சென்னையில் இருந்து அதிகாலை, 3.35 மணிக்கு மொரிசியஸ் புறப்பட்டு செல்ல வேண்டிய ஏர் மொரிசியஸ் விமானம், இன்று தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல சென்னையில் இருந்து அதிகாலை, 3 மணிக்கு டெல்லி செல்ல வேண்டிய, ஏர் இந்தியா பயணிகள் விமானம், இன்று 3 மணி நேரத்திற்கு மேல் தாமதமாக, காலை 6.20 மணிக்கு, சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றது.

மேலும் இன்று காலை 10 மணிக்கு, சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல வேண்டிய ஸ்பைஜெட் தனியார் பயணிகள் விமானம், மூன்றரை மணி நேரத்திற்கு மேல் தாமதமாக, இன்று பகல் 1.35 மணிக்கு, சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு, பகல் 1.45 மணிக்கு வரவேண்டிய ஸ்பைஸ் ஜெட் தனியார் பயன்கள் விமானமும், மூன்றரை மணி நேரத்திற்கு மேல் தாமதமாக, சென்னை வந்து சேரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் ஏராளமான விமானங்கள் தாமதம்... பயணிகள் அவதி : விவரம் உள்ளே !

இந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்ல வேண்டிய ஸ்பைஜட் தனியார் பயன்கள் விமானமும், காலை 9.40 மணிக்கு ஹைதராபாத்திலிருந்து சென்னை வர வேண்டிய ஸ்பைஸ் ஜெட் தனியார் பயணிகள் விமானமும், இன்று ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைப்போல் சென்னை விமான நிலையத்தில் இன்று, ஹைதராபாத் விமானங்கள் 2 ரத்து, மொரிசியஸ், டெல்லி தூத்துக்குடி ஆகிய 5 விமானங்கள், பல மணி நேரம் தாமதமாகி, பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆனால் இந்த விமானங்கள் தாமதங்கள், ரத்து குறித்து பயணிகளுக்கு, முறையான அறிவிப்புகளை செய்யவில்லை என்றும், விமானங்கள் ரத்து, தாமதம் ஆகியவற்றுக்கான காரணங்களையும் தெரிவிக்கவில்லை என்றும், பயணிகள் தரப்பில் புகார்கள் தெரிவிக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories