தமிழ்நாடு

விலைவாசி உயர்வை தடுக்க தவறிய ஒன்றிய பா.ஜ.க அரசு : மக்களவையில் ஆர். கிரிராஜன் MP குற்றச்சாட்டு!

விலைவாசி உயர்வை தடுக்க ஒன்றிய அரசு தவறியதாக மக்களவையில் ஆர். கிரிராஜன் எம்.பி குற்றம்சாட்டியுள்ளார்.

விலைவாசி உயர்வை தடுக்க தவறிய ஒன்றிய பா.ஜ.க அரசு : மக்களவையில் ஆர். கிரிராஜன் MP குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வருடத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் உள்நாட்டுப் பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்ததை கண்டுகொள்ளாத ஒன்றிய அரசை குற்றம்சாட்டி நாடாளுமன்றத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர். கிரிராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

விலை உயர்வு நெருக்கடியையும் அதன் தாக்கத்தையும் குறைக்க அரசு ஏன் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை? என்றும் அரசு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதல் உணவு தானியங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை ஒதுக்கீடு செய்துள்ளதா?

அப்படியானால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக நடுத்தர வர்க்க மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் பிரச்சினைகளைத் தணிக்க அரசு எடுத்த பொருத்தமான நடவடிக்கைகள் என்ன? என்று அவர் கேட்டுள்ளார்.

உள்ளாட்சிகளில் மாற்றுத் திறனாளிக்கான பிரதிநிதித்துவம்!

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி வழங்கும் சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றியுள்ளது. அதை தொடர்ந்து திராவிட மாடல் அரசின் இத்திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்துவது குறித்து ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து திமுக மக்களவை உறுப்பினர்கள் தங்க தமிழ்செல்வன் மற்றும் கணபதி ராஜ்குமார் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எக்கு இறக்குமதியில் சீனாவை சார்ந்திருப்பது ஏன்?

இந்தியாவில் கச்சா எஃகு உற்பத்தியை தற்போதுள்ள 8 மெட்ரிக் டன் உற்பத்தியில் இருந்து 2030 ஆம் ஆண்டுக்குள் உற்பத்தியை 255 மெட்ரிக் டன்னாகவும், மொத்த கச்சா எஃகு திறனை 300 மெட்ரிக் டன்னாகவும் உயர்த்துவது குறித்து ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் என்ன என கேட்டு நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவின் மொத்த எஃகு இறக்குமதியில் சீன எஃகு 70% க்கும் அதிகமாக இருந்தது என்பது உண்மையா, அப்படியானால், எஃகு இறக்குமதியில் சீனாவை அதிகமாக சார்ந்திருப்பதைக் குறைக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories