தமிழ்நாடு

Digital Store Value Pass... சென்னை மெட்ரோ ரயிலில் எளிதாக பயணிக்க இதை பயன்படுத்தலாம் : விவரம் உள்ளே !

Digital Store Value Pass... சென்னை மெட்ரோ ரயிலில் எளிதாக பயணிக்க இதை பயன்படுத்தலாம் : விவரம் உள்ளே !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் Digital Store Value Pass (SVP) வசதியை பயன்படுத்தி பயணிக்க வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், நவம்பர் 2022 முதல் Digital Store Value Pass (SVP) வசதியை அறிமுகப்படுத்தியது, அனைத்து மெட்ரோ பயணிகளும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான மொபைல் செயலியைப் (CMRL Mobile App) பதிவிறக்கம் செய்து தங்களுது மொபைல் எண்ணை பதிவு செய்து SVP-ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.

SVP-ஐ சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மூலம் மட்டுமே வாங்க முடியும். ரீசார்ஜ் செய்யப்பட்ட இறுதி நாளிலிருந்து 5 ஆண்டுகள் வரை Store Value Pass செல்லுபடியாகும். இது மெட்ரோ பயணிகளுக்கு எளிதான மற்றும் டிஜிட்டல் பயண முறையை வழங்குகிறது. SVP-ஐ பயன்படுத்தி மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்கள் பயணக் கட்டணத்தில் 20% தள்ளுபடியை பெறலாம். இந்த Store Value Pass, பயணிகளின் வசதியை மேம்படுத்துவதோடு, பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Digital Store Value Pass... சென்னை மெட்ரோ ரயிலில் எளிதாக பயணிக்க இதை பயன்படுத்தலாம் : விவரம் உள்ளே !

ஒவ்வொரு நாளும் புது QR குறியீட்டை வழங்குவதன் மூலம் மெட்ரோ அமைப்பிற்குள் பாதுகாப்பான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட அணுகலை அனுமதிக்கிறது. இந்த Store Value Pass-ல் குறைந்தபட்சம் ரூ.50 முதல் அதிகபட்சமாக ரூ.3000 வரை டாப்-அப் செய்து கொள்ளலாம். பயன்பாட்டின் அடிப்படையில் கட்டணத் தொகை கழிக்கப்படும், மீதமுள்ள தொகை இருப்புத் தொகையாக வைக்கப்படும்.

கூடுதலாக, பயணிகள் Store Value Pass-ஐ சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாகன நிறுத்துமிடங்களில் பயன்படுத்தலாம், இது தடையற்ற போக்குவரத்து பயண அனுபவத்தை வழங்குவதோடு பயணிகளுக்கு கூடுதல் தள்ளுபடிகளையும் வழங்குகிறது. இந்த (Store Value Pass) டிஜிட்டல் மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட பயணச் சீட்டு முறையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது "என்று கூறப்பட்டுள்ளது. .

banner

Related Stories

Related Stories