தமிழ்நாடு

‘ஓரணியில் தமிழ்நாடு’ - மருத்துவமனையில் இருந்தபடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

மருத்துவமனையில் இருந்தபடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.

‘ஓரணியில் தமிழ்நாடு’ - மருத்துவமனையில் இருந்தபடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அப்போலோ மருத்துவமனையில் திமுக மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

தமிழ்நாட்டின் மண் மொழி மானம் காக்க ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முன்னெடுப்பில் அதிகமான மக்களை இணைத்து மாபெரும்வெற்றி அடைந்து வருவதற்கு காரணமான கழக உடன்பிறப்புகளுக்கு பாராட்டு தெரிவித்த கழகத்தலைவர் அவர்கள் 150 தொகுதிகளில் 30% உறுப்பினர் சேர்க்கை என்ற இலக்கை அடைந்ததுள்ளதையும் சுட்டிக்காட்டி பாராட்டினார்.

அதேசமயம் உறுப்பினர் சேர்க்கையில் பின் தங்கியுள்ள ஓரிரு மாவட்டங்கள், தொகுதிகளைக் குறிப்பிட்டு அவற்றை மண்டலப் பொறுப்பாளர்கள் கவனித்துச் சரிசெய்யுமாறு அறிவுறுத்தினார்.

சில பாகங்களில் உறுப்பினர் சேர்க்கை விவரங்களில் சில குறைபாடுகள் இருப்பதை சுட்டிக்காட்டிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் மீண்டும் முதலில் இருந்து உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

வீடு வீடாகச் செல்லும் போது மக்களிடையே கிடைக்கும் வரவேற்பு, திராவிட மாடல் அரசின் திட்டங்கள் குறித்து மகிழ்ச்சியுடன் மக்கள் பேசுவது ஆகியவற்றை மண்டலப் பொறுப்பாளர்கள் விளக்கினர்.

இக்கலந்துரையாடலில் முதலமைச்சர் அவர்கள் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்திற்கு மக்களிடையே கிடைத்துள்ள வரவேற்பு குறித்தும் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து சமூகவலைதள பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”கழக உடன்பிறப்புகள் களத்தில் ஓய்வின்றி களமாடிக் கொண்டிருக்கும் போது, மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் எனக்கு மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை.

உயிராக நம்மை இயக்கும் கழகத்தின் களச்செயல்பாடுகள் குறித்து மண்டலப் பொறுப்பாளர்களிடம் ஆலோசித்தபோது, உறுப்பினர் சேர்க்கையில் 150 தொகுதிகளில் நம் இலக்கை எட்டிய இன்பச் செய்தியை அவர்கள் பகிர, ஓரணியில்தமிழ்நாடு முன்னெடுப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கி உற்சாகம் பெற்றேன்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories