தமிழ்நாடு

பேச்சுப் போட்டியில் முதல் பரிசு ரூ.1 லட்சம், 2ஆம் பரிசு ரூ.50 ஆயிரம் : அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்!

சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டிகளில் மாவட்ட மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்.

பேச்சுப் போட்டியில் முதல் பரிசு ரூ.1 லட்சம், 2ஆம் பரிசு ரூ.50 ஆயிரம் : அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், நேற்று (19.7.2025) சென்னை, கலைவாணர் அரங்கத்தில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற 2024-25ஆம் ஆண்டிற்கான அனைத்து கல்லூரி மாணவ, மாணவியருக்கான பேச்சுப் போட்டிகளில் மாவட்ட மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் பாடத்திட்டங்களுக்கு அப்பால், மாணவர்கள் அறிந்தும் உணர்ந்தும் தெளிய வேண்டிய உன்னத விழுமியங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கவும், தமிழ் சமூகத்தின் தனித்துவமான பண்பாடுகளை, பெருமைகளை, இலக்கியங்களை, கலைகளை, வரலாற்றை மாணவர்கள் அறிந்து கொள்ளும் விதமாக தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பாக அனைத்து கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்பேச்சுப் போட்டிகள் (1) இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சிறுபான்மையினருக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற பாதுகாப்பு உரிமைகளை திராவிட சித்தாந்தம், திராவிடமாடல் ஆட்சியில் எவ்வாறு உறுதிப்படுகிறது. (2) திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் சிறுபான்மையினருக்கு கொடுக்கப்படுகின்ற பாதுகாப்பு, உரிமைகள், சிறப்பு திட்டங்கள், தனிமனித சுதந்திரத்திற்கும், சமுதாயத்திற்கும் எவ்வகையான முன்னேற்றங்களை ஏற்படுத்துகிறது.

பேச்சுப் போட்டியில் முதல் பரிசு ரூ.1 லட்சம், 2ஆம் பரிசு ரூ.50 ஆயிரம் : அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்!

(3) திராவிட மாடல் ஆட்சியில் சிறுபான்மையினருக்கு வழங்கப்படுகின்ற சிறப்பு திட்டங்கள் மற்ற மாநிலங்களைவிட எவ்வாறு சமூக நீதியை நிலைநாட்டுகிறது ஆகிய தலைப்புகளில் நடத்தப்பட்டது.

இதில் சுமார் 16,000 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். தமிழ் மற்றும் ஆங்கில பேச்சுப் போட்டிகளில் மாவட்ட அளவில் 38 மாவட்டங்களில் 228 மாணவ, மாணவியர்கள் வெற்றி பெற்றனர். இதில் முதல் பரிசு பெற்றவர்களுக்கு ரூ.20,000/- இரண்டாம் பரிசு பெற்றவர்களுக்கு ரூ.10,000/- மற்றும் மூன்றாம் பரிசு பெற்றவர்களுக்கு ரூ.5,000/- வழங்கப்படுகிறது.

மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு இடையே மாநில அளவில் சென்னை, இலயோலா மேலாண்மை கல்வி நிறுவனத்தில் 18.7.2025 அன்று நடைபெற்ற தமிழ் மற்றும் ஆங்கில பேச்சுப் போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு தலா முதல் பரிசாக ரூ.1 இலட்சம், இரண்டாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாய் மற்றும் மூன்றாம் பரிசாக 25 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.

இன்றையதினம் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற தமிழ் மற்றும் ஆங்கில பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 228 மாணவ, மாணவியர்கள் மற்றும் இதில், மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவ/மாணவியர்களுக்கு இடையே போட்டி நடைப்பெற்று அவற்றில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற (தமிழ் மற்றும் ஆங்கிலம்) 6 மாணவ/மாணவியர்கள் ரூ.30 இலட்சத்து 10 ஆயிரம் பரிசுத் தொகையாகவும், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்தினார்.

banner

Related Stories

Related Stories