தமிழ்நாடு

‘சமூகநீதி விடுதிகள்’ : முதலமைச்சரின் அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் வரவேற்பு!

‘சமூகநீதி விடுதிகள்’ என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

‘சமூகநீதி விடுதிகள்’ : முதலமைச்சரின் அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் வரவேற்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முழுவதும் எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கும் பள்ளி - கல்லூரி விடுதிகள், ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும், தற்கால இளம் சந்ததியினர் அனைவரும் சாதி வேறுபாடின்றி ஒன்றிணைந்து, எதிர்கால தமிழ்ச் சமுதாயத்தை, சமத்துவச் சமுதாயமாகக் கட்டமைத்திட இந்த முயற்சிகள் அடித்தளம் அமைக்கும்.

சமூகநீதி - சமநீதி - சட்ட நீதி ஆகியவை அனைவர்க்கும் பொது என்ற நிலையை உருவாக்க திராவிட மாடல் அரசு தொடர்ந்து பங்காற்றும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

சிபிஐ (எம்) மூத்த தலைவர் கே‌. பாலகிருஷ்ணன்

”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு பிரிவுகளில் உள்ள விடுதிகளின் பெயரை சமூக நீதி விடுதியென பெயர் மாற்றம் செய்துள்ளது ஒரு சிறந்த முன்னெடுப்பு. இது வெறும் சமூக நீதி விடுதிகள் என பெயர் மாற்றம் செய்தது மட்டும் பார்க்க முடியாது. அதன் பின்னால் பல்வேறு துறையின் கீழ் விடுதிகள் செயல்பட்டாலும் அனைத்து மாணவர்களும் சமமென சமூக நீதி சமத்துவ சிந்தனை‌யை அடையாளப்படுத்தும் வகையில் விடுதி பெயர் மாற்றம் பயன்படும்.”

விசிக தலைவர் தொல். திருமாவளவன்

"அனைத்து பள்ளி - கல்லூரி விடுதிகளும் ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு மகிழ்ச்சியை கொடுக்கிறது. சமத்துவமே இலக்கு, சமூக நீதியே வழி என்ற அடிப்படையில் திராவிட மாடல் அரசு செயல்படுகிறது."

வி.சி.க எம்.பி ரவிக்குமார்

”தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் விடுதிகளின் பெயர்களை ‘சமூகநீதி விடுதிகள்’ என பெயர் மாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி”

நடிகர் சத்யராஜ்

”’எல்லார்க்கும் எல்லாம்’ என்பதுதான் திராவிட இயக்கத்தின் கொள்கை. அந்த அடிப்படையில் காலணி என்ற வார்த்தையை தூக்கி வீசிவிட்டு ‘சமூகநீதி விடுதிகள்’ என பெயர் மாற்றம் செய்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது பாராட்டுகள், வாழ்த்துக்கள்."

banner

Related Stories

Related Stories