தமிழ்நாடு

”டிசம்பர் மாதத்திற்குள் 7,212 அடுக்குமாடி குடியிருப்புகள்” : அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்!

7212 அடுக்குமாடி குடியிருப்புகள் திறந்துவைக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

”டிசம்பர் மாதத்திற்குள் 7,212 அடுக்குமாடி குடியிருப்புகள்” : அமைச்சர் தா.மோ.அன்பரசன்  தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் இன்று குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் தலைமையில் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமான பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் தெரிவிக்கையில் முதலமைச்சர் அவர்களின் உத்தரவுக்கிணங்க வாரியத்தின் மூலம் கடந்த 30 - 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் தரத்தினை கண்டறிய வல்லுநர் குழு நியமிக்கப்பட்டது. அக்குழுவின் பரிந்துரையின் படி மறுகட்டுமான திட்டத்தின் கீழ் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பழைய அடுக்குமாடி குடியிருப்புகள் இடிக்கப்பட்டு புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

அதன்படி சென்னையில் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் ராஜாதோட்டம், வேம்புலி அம்மன் கோயில் தெரு, சுபேதார் கார்டன், டாக்டர் தாமஸ் சாலை, வன்னியபுரம், எம்.எஸ் நகர், திருவெற்றியூர் கிராம சாலை, காக்ஸ் நகர், செட்டித் தோட்டம், அப்பாவு நகர் சுப்புபிள்ளை தோட்டம், கொய்யா தோப்பு, பெரிய பாளையத்து அம்மன் கோயில், கோட்டூர்புரம், என் என் நகர் சிந்தாதிரி பேட்டை, காந்தி நகர், நாட்டான் தோட்டம், கங்கைகரைபுரம், ஆகிய 17 திட்டப்பகுதிகளும் புறநகர் பகுதியில் திருநெல்வேலி மாவட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் நகர்,

கரூர் மாவட்டத்தில் குழந்தை கவுன்டன்பாளையம் மற்றும் மதுரை மாவட்டத்தில் சுப்ரமணியபுரம் ஆகிய 3 திட்டப்பகுதிகளும் ஆக மொத்தம் 20 திட்டப்பகுதிகளில் ரூ.1223.62 கோடி மதிப்பீட்டில் 7212 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிமுடிக்கப்பட்டு ஜூலை 2025 முதல் டிசம்பர் 2025 க்குள் படிப்படியாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories