தமிழ்நாடு

3D வடிவமைப்பில் கீழடியின் இரு முகங்கள்! - 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்கள்!

தமிழர்களின் பெருமையான கீழடியின் 110 ஏக்கர் பரப்பளவில், வெறும் 4% இடங்கள் மட்டுமே தொல்லியல் துறையினர் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

3D வடிவமைப்பில் கீழடியின் இரு முகங்கள்! - 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை கீழடி அகழாய்வுத் தளத்தில் 2018-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து தற்போது வரை ஐந்து கட்டங்களாக அகழாய்வு மேற்கொண்டு வருகிறது. தமிழர்களின் பண்பாட்டின் முக்கியத்துவம் மற்றும் தொன்மையை நிரூபிக்கவும், அதை உலகளவில் கொண்டு செல்லவும் தொல்லியல் துறை உலகப் புகழ்பெற்ற அறிவியல் ஆய்வகங்களுக்கு கீழடியில் கண்டெடுக்கப்பட்ட முக்கியமான கண்டுபிடிப்புகளை அனுப்பி அதிகாரபூர்வமான முடிவுகளைப் பெற்றுள்ளது.

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட மாதிரிகளின் அறிவியல் காலக்கணிப்பு கி.மு. ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வைகை ஆற்றங்கரையில் நகரமயமாக்கல் இருந்ததை உறுதிப்படுத்தியது. மேலும், கங்கைச் சமவெளியின் நகரமயமாக்கலுக்கு சமகாலமானது என்பதையும் உறுதிபடுத்தியுள்ளது. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தமிழ்ச் சமூகம் கல்வியறிவும் எழுத்தறிவும் பெற்றிருந்தனர் என்பதை அறிவியல் அடிப்படையில் நிலைநிறுத்தியுள்ளது.

கீழடி அகழாய்வில் 1000-க்கும் மேற்பட்ட குறியீடுகளும், 60-க்கும் மேற்பட்ட தமிழி எழுத்துப் பொறிப்புக் கொண்ட பானை ஓடுகளும் கண்டெக்கப்பட்டுள்ளன. இப்பானை ஓடுகளில் குவிரன் ஆதன், ஆதன் போன்ற தனிநபர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளதன் வாயிலாக சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரும் கல்வியறிவு பெற்றிருந்தனர் என்பதை வெளிப்படுகிறது.

3D வடிவமைப்பில் கீழடியின் இரு முகங்கள்! - 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்கள்!

தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தரவுகள் மற்றும் மற்றும் கண்டுபிடிப்புகளின் வாயிலாக வைகை ஆற்றங்கரையில் வாழ்ந்த தமிழ்ச் சமூகமானது வேளாண்மை மூலம் பொருளாதாரத்தினை உயர்த்திக் கொண்டனர், மட்கலன்கள், இரும்பு, நெசவு, மணிகள், சங்கு வளையல்கள் ஆகிய தொழில்களை மேற்கொண்டிருந்தனர் என்பதும் அகழாய்வுச் சான்றுகள் மூலம் அறிகிறோம்.

மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் பகுதிகளில் கிடைக்கப்பெறுகின்ற மூலக்கற்களைக் கொண்டு சூதுபவள மணிகள், அகேட் போன்ற கல்மணிகள் செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பைக் காட்டுகின்றனது. அதுபோல, கங்கைச் சமவெளியைச் சார்ந்த கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முந்தைய வெள்ளி முத்திரைக் காசுகள் கிடைப்பதின் மூலம் கங்கைச் சமவெளியுடன் வணிகப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதை உறுதிசெய்ய முடிகிறது.

இந்நிலையில், மதுரையில் இருந்து 12 கி.மீ தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கீழடியில் கிடைத்த மண்டை ஓடுகளை வைத்து, 2,500 ஆண்டுகளுக்கு முன்பு கீழடி பகுதியில் வாழ்ந்த இருவரின் முகங்களை 3D செயல்முறையில் வடிவமைத்துள்ளது இங்கிலாந்தின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம்.

தமிழரின் தொன்மை ஆராய்ச்சியில், ஓர் முக்கிய நகர்வாக இந்த வடிவமைப்பு அமைந்துள்ளது. இந்நிலையில், கீழடி ஆராய்ச்சியை விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு முற்பட்டுள்ளது.

காரணம், தமிழர்களின் பெருமையான கீழடியின் 110 ஏக்கர் பரப்பளவில், வெறும் 4% இடங்களை மட்டுமே தொல்லியல் துறையினர் ஆராய்ச்சி செய்துள்ளனர். இதில் கிடைத்த 1,000க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள், தமிழர்கள் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே செழுமையுடன் வாழ்ந்ததை உறுதி செய்கின்றன.

ஆகையால், தமிழ்நாடு அரசு கூடுதலான ஆராய்ச்சியில் ஈடுபட்டு, கீழடியின் சாலை அமைப்பையும், ஊரின் கட்டமைப்பையும் கண்டறிய திட்டமிட்டுள்ளது. அறிவியல் ஏந்துகளின் உதவியோடு, சங்ககாலத் தமிழ் மக்களின் வாழ்வியல் கட்டமைப்பை மீண்டும் வெளிக்கொண்டுவர முயற்சிப்பதாகவும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories