தமிழ்நாடு

60 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் : 1,00,168 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்!

1,00,168 பயனாளிகளுக் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

60 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் :  1,00,168 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் அரசு விழாக்களில் கலந்து கொள்வதற்காக நேற்று (25.6.2025) சென்னை, சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து வேலூர் புறப்பட்டுச் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு காட்பாடி இரயில் நிலையத்தில், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர், வேலூர், அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவில், தரை மற்றும் ஏழு தளங்களுடன் 197 கோடியே 81 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அரசு வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் வேலூர் மாவட்டத்தில் 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 7 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான கூடுதல் கட்டடங்கள் மற்றும் 2 துணை சுகாதார நிலையங்களுக்கான புதிய கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, வேலூர் மாவட்ட வருவாய் வட்டங்களுக்குட்பட்ட கிராமங்களில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டி வசித்து வரும் நபர்களுக்கு ஒருமுறை சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ், நிலங்களை வரன்முறை செய்து 21,776 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

பின்னர், வேலூர் மாவட்டம், பூதூரில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, பயனாளிகளிடம் கலந்துரையாடி, அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

அதன் தொடர்ச்சியாக, இன்றையதினம் (26.6.2025) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், திருப்பத்தூர் மாவட்டம், மண்டலவாடியில் நடைபெற்ற அரசு விழாவில், 174 கோடியே 39 இலட்சம் ரூபாய் செலவில் 90 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 68 கோடியே 76 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 60 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 273 கோடியே 83 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 1,00,168 பயனாளிகளுக்கு வழங்கினார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற பணிகளின் விவரங்கள்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி அரசு மருத்துவமனைகளில் 47 கோடியே 94 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் புறநோயாளிகள் பிரிவுகள் மற்றும் ஐ.சி.யூ வார்டுகள், லேப், ஸ்கேன், மருந்தகம் மற்றும் எக்ஸ்ரே அறைகள், நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் 2 கோடி ரூபாய் செலவில் புறநோயாளிகள் பிரிவு மற்றும் போதைப் பொருள் மறுவாழ்வு மையக் கட்டடம், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 2 கோடியே 14 இலட்சம் ரூபாய் செலவில் இரண்டாம் தளத்தில் மாவட்ட தொடக்க நிலை இடையீட்டுச் சேவைகள் மையக் கட்டடம் மற்றும் முதல் தளத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகக் கட்டடம், ஜோலார்பேட்டையில் 1 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் ஆரம்ப சுகாதார நிலைய புதிய கூடுதல் கட்டடம் மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய அலகு, வாணியம்பாடியில் 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், திருப்பத்தூரில் 30 இலட்சம் ரூபாய் செலவில் கிராமப்புற துணை சுகாதார நிலையம்;

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், கன்னடிக்குப்பம் – அய்யனூர், வளையாம்பட்டு – வாணியம்பாடி மற்றும் ஜோலார்பேட்டை – சோமநாயக்கன்பட்டி ஆகிய இரயில் நிலையங்களுக்கு இடையே 89 கோடியே 73 இலட்சம் ரூபாய் செலவில் சாலை மேம்பாலங்கள்;

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடத்திற்கு 11 கோடியே 67 இலட்சத்து 68 ஆயிரம் ரூபாய் செலவில் அடிப்படை வசதிகளுடன் கூடுதல் கட்டடம்;

தாட்கோ சார்பில், புதூர்நாடு, கீழுர் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிக்கு 5 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் 136 மாணவியர்கள் தங்கும் விடுதிக் கட்டடம்;

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில், புதூர்நாடு, நெல்லிவாசல்நாடு, காவேரிப்பட்டு, குனிச்சி, செவ்வாத்தூர் ஆகிய கிராமங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் 1 கோடியே 80 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் செலவில் வகுப்பறைக் கட்டடங்கள், கோணப்பட்டு ஊராட்சியில் 30 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் பஞ்சாயத்து அலுவலகக் கட்டடம், புதூர்நாடு ஊராட்சியில் 30 இலட்சம் ரூபாய் செலவில் துணை சுகாதார மையக் கட்டடம், சின்னமோட்டூர், குனிச்சி, பாலூர் ஆகிய இடங்களில் 50 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் புதிய அங்கன்வாடிக் கட்டடங்கள், சிக்கனாங்குப்பம், ஆதியூர், குரும்பகேரி, கத்தாரி ஆகிய இடங்களில் 47 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவில் புதிய நியாயவிலைக் கடைகள், நாராயணபுரம் மற்றும் கொண்டகிந்தனப்பள்ளியில் 16 இலட்சம் ரூபாய் செலவில் பேருந்து நிறுத்தத்தில் புதிய பேருந்து நிழற்கூடம், அரங்கல்துருகம், கல்நார்சம்பட்டி, பந்தராப்பள்ளி ஜெயந்திபுரம் குடியிருப்பு, சிம்மனாபுதூர், செவ்வாத்தூர் ஆகிய இடங்களில் 37 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் புதிய பல்நோக்கு கட்டடங்கள், சௌடேகுப்பம், பெரியகண்ணாலபட்டி, செவ்வாத்தூர், குனிச்சி ஆகிய இடங்களில் 31 இலட்சத்து 4 ஆயிரம் ரூபாய் செலவில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள்;

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில், தாயலூர், நிலாவூர், மங்கலம் ஆகிய இடங்களில் 51 இலட்சத்து 8 ஆயிரம் ரூபாய் செலவில் மயானச் சுற்றுச் சுவர்கள், நெல்லிவாசல்நாடு பகுதியில் 17 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் புதிய அங்கன்வாடி கட்டடம், அத்தனாவூர் பஞ்சாயத்து யூனியன் துவக்கப் பள்ளியில் 17 இலட்சத்து 54 ஆயிரம் ரூபாய் செலவில் சுற்றுச்சுவர், சீகஜொனை முதல் பாறைகோட்டை மற்றும் பெரியூரில் உள்ள சாலையில் 26 இலட்சத்து 72 ஆயிரம் ரூபாய் செலவில் கல்வெர்ட்டுகள், மங்கலம், புலியூர், சின்னவட்டனூர், கோம்பை, நடுக்குப்பம், அருமல்பட்டு, சீகஜொனை, மாம்பாக்கம் ஆகிய இடங்களில் 1 கோடியே 5 இலட்சத்து 96 ஆயிரம் ரூபாய் செலவில் கதிரடிக்கும் தளங்கள், மலையாண்டிப்பட்டி, தகரக்குப்பம், பெரும்பள்ளி, மங்கலம், ஏரிப்பாறை, அத்தனாவூர் ஆகிய இடங்களில் 52 இலட்சத்து 13 ஆயிரம் ரூபாய் செலவில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், மாம்பாக்கத்தில் 8 இலட்சத்து 77 ஆயிரம் ரூபாய் செலவில் நியாயவிலைக் கடை, சீகஜொனை மற்றும் பெரியூர் ஆகிய இடங்களில் 17 இலட்சத்து 4 ஆயிரம் ரூபாய் செலவில் புதிய போர்வெல், மோட்டார் பம்ப்செட்டுடன் துணைக் கருவிகள் மற்றும் பம்ப் ரூம்கள், மாம்பாக்கத்தில் 6 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் செலவில் மயான காத்திருப்போர் கூடம், மாம்பாக்கம், அரசமரத்துக்கொல்லை, சின்னவட்டனூர் மற்றும் மாம்பாக்கம் ஆகிய இடங்களில் 21 இலட்சத்து 81 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாக கிணறு, மோட்டார், குழாய் மற்றும் ஏற்கனவே உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு கேபிள் மற்றும் உறிஞ்சுக் குழாய் இணைப்புகள், நெல்லிவாசல் மற்றும் மேல்பட்டு ஆகிய இடங்களில் 11 இலட்சத்து ஆயிரம் ரூபாய் செலவில் புதிய கிணற்றுடன் பவர் பம்ப் மற்றும் கேபிள் ஒயர் பணிகள், ஏரிப்பாறை மற்றும் பரக்கோட்டை ஆகிய இடங்களில் 7 இலட்சத்து 82 ஆயிரம் ரூபாய் செலவில் திறந்தவெளி கிணற்றிலிருந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வரையில் பைப்லைன் பணிகள், மாம்பாக்கத்தில் 4 இலட்சத்து 8 ஆயிரம் ரூபாய் செலவில் வீட்டுக்குழாய் நீட்டிப்பு செய்யும் பணிகள், மங்கலத்தில் 1 இலட்சத்து 69 ஆயிரம் ரூபாய் செலவில் புதிய குழாய் இணைப்புகள், பெரியூரில் 1 இலட்சத்து 58 ஆயிரம் ரூபாய் செலவில் திறந்தவெளி கிணற்றில் பம்ப் அறை;

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், ஆம்பூர் – சான்றோர்குப்பம், பெத்லேகம், கஸ்பா, கோவிந்தாபுரம் ஆகிய நகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் 2 கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவில் வகுப்பறைக் கட்டடங்கள்;

வனத்துறை சார்பில், திருப்பத்தூரில் 29 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் வனத்துறை ஆய்வு மாளிகை கட்டடம், திருப்பத்தூர் மற்றும் ஆலங்காயம் ஆகிய இடங்களில் 40 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் வனச்சரக அலுவலகக் கட்டடங்கள்;

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், மேலூர், மேல்பட்டு, சின்னமூக்கனூர், பெரிய கம்மியம்பட்டு ஆகிய இடங்களில் 61 இலட்சத்து 81 ஆயிரம் ரூபாய் செலவில் புதிய அங்கன்வாடி மையக் கட்டடங்கள்;

கால்நடைப் பராமரிப்புத் துறை சார்பில், குனிச்சியில் 58 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கால்நடை மருந்தகக் கட்டடம்;

என மொத்தம், 174 கோடியே 39 இலட்சம் ரூபாய் செலவில் 90 முடிவுற்றப் பணிகளை முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் திறந்து வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளின் விவரங்கள்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவுக் கட்டடம்;

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், திருப்பத்தூரில் 4 கோடியே 95 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகராட்சி அலுவலகக் கட்டடம்;

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில், மாதனூர் மற்றும் கந்திலி ஆகிய இடங்களில் ஊராட்சி ஒன்றிய கட்டடங்கள், திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 27 சாலை அமைக்கும் பணிகள், பிச்சனூர்,வெலக்கல்நத்தம், ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கூடுதல் கட்டடங்கள், ஆண்டியப்பனூர் மற்றும் பச்சூர் ஆகிய இடங்களில் பொது சுகாதாரப் பிரிவு தொகுதிக் கட்டடங்கள், நாய்க்கனேரி, வெள்ளக்குட்டை, சு. பள்ளிப்பட்டு, பச்சூர் ஆகிய இடங்களில் துணை சுகாதார மையக் கட்டடங்கள், நடுப்பட்டறை, பலப்பனூர், மாதக்கடப்பா, பழைய வாணியம்பாடி,கிட்டபையனூர், புலிக்குட்டை, அனுமம்பட்டி, மாதனூர், ராமச்சந்திரபுரம், சிக்கனாங்குப்பம், அரசனப்பள்ளி, திம்மாம்பேட்டை, சிங்கம்பாளையம், பழைய அத்திக்குப்பம், கந்திலி, அயத்தப்பட்டு, பார்சனப்பள்ளி, அண்ணா நகர் ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநலைப்பள்ளிகளில் வகுப்பறைக் கட்டடங்கள், என 40 கோடியே 92 இலட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 55 புதிய திட்டப் பணிகள்;

வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில், ஆம்பூர் உதவி ஆணையர் அலுவலகத்திற்கு 1 கோடியே 69 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வணிகவரி அலுவலகக் கட்டடம்;

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில், அத்தனாவூர் மற்றும் புதூர்நாடு ஆகிய இடங்களில் 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சமுதாயக் கூடங்கள்;

என மொத்தம், 68 கோடியே 76 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 60 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

60 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் :  1,00,168 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விவரங்கள்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 18,027 பயனாளிகளுக்கு இணையவழி பட்டாக்கள், நத்தம் நிலவரித் திட்டத்தில் பட்டாக்கள், கிராம கணக்குகளில் மாறுதல், கிராம நத்தம் (ஊரகம் மற்றும் நகரம்), சிறப்பு வரன்முறைப்படுத்துதல் (ஊரகம் மற்றும் நகரம்), தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், நத்தம் நிலவரித்திட்ட கணினி திருத்தம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் திட்டம், ஆதிதிராவிடர் தனி வட்டாட்சியர் வாயிலாக பட்டாக்கள், 12,754 பயனாளிகளுக்கு ஆதரவற்ற விதவை, பழங்குடியினர் சாதி மற்றும் இதர சான்றிதழ்கள்;

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 600 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் உதவிகள், மகளிர் திட்டத்தில் 18,000 பயனாளிகளுக்கு சுயஉதவிக் குழு வங்கிக்கடன், சமுதாய முதலீட்டு நிதி, சமுதாய தொழில் முனைவோர் நிதி, மதிசிறகுகள் ஓரிடர் சேவை மையம், ஆதார நிதி ஆகிய திட்டங்களில் உதவிகள்;

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 21,720 பயனாளிகளுக்கு ப்ரீ மெட்ரிக் உதவித்தொகை, போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை, பெண் கல்வி ஊக்கத்தொகை, பழங்குடியினர் நலவாரிய அடையாள அட்டைகள்;

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் 9,276 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள், விதவை மகள் திருமண நிதிஉதவித் திட்டம், கலப்பு திருமண நிதி உதவித் திட்டம், ஆதரவற்ற பெண்களுக்கான நிதி உதவித் திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் ஆகிய திட்டங்களில் உதவிகள்;

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 450 பயனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள், தையல் இயந்திரங்கள், காது கேட்கும் கருவிகள், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள், கைப்பேசி கருவிகள், சக்கர நாற்காலிகள்;

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 4,008 பயனாளிகளுக்கு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்குதல், குறுவைநெல் சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம், மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம், மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், தேசிய சமையல் எண்ணெய் பாதுகாப்பு இயக்கம், நுண்ணீர் பாசனத் திட்டம், ஒருங்கிணைந்த பண்ணை அமைப்பு, தேசிய உணவு மற்றும் பாதுகாப்பு இயக்கம், பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டம் ஆகிய திட்டங்களில் உதவிகள்;

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் 3,503 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள், மகளிர் சுயஉதவிக் குழு கடன், பயிர் கடன், கால்நடை பராமரிப்பு கடன்;

தாட்கோ சார்பில் 841 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவுத் திட்டம், பழங்குடியின மகளிர் சுயஉதவி குழுக்களுக்கான பொருளாதார கடனுதவித் திட்டம், நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம், தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அடையாள அட்டைகள் போன்ற பல்வேறு உதவிகள்;

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் 602 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, விபத்து உதவித்தொகை, ஓய்வூதியம், கல்வி உதவித்தொகை, பணியிடத்து விபத்து மரணம் ஆகிய திட்டங்களில் உதவிகள்;

என பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 273 கோடியே 83 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 1,00,168 பயனாளிகளுக்கு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

இன்றையதினம் நடைபெற்ற திருப்பத்தூர் மாவட்ட அரசு விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மொத்தம் ரூ.517 கோடி செலவிலான 90 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 60 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,00,168 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

banner

Related Stories

Related Stories