தமிழ்நாடு

”கீழடி விவகாரத்தில் திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

விவகாரத்தில் திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

”கீழடி விவகாரத்தில் திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கீழடி அகழாய்வுகள் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பிறகும் அதை ஏற்று ஆய்வு முடிவுகளை வெளியிட ஒன்றிய பா.ஜ.க அரசு மறுத்து வருகிறது. ஒன்றிய அரசின் இந்த தமிழர் விரோத போக்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கீழடி அகழாய்வுகளை ஏற்க மறுக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து மதுரையில் நாளை (18.6.2025) திமுக மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என செயலாளர் ராஜீவ் காந்தி அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நாளை திமுக மாணவர் அணி நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கூடி ஒன்றிய அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்துவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதளத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”எத்தனை எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? அத்தனையையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்துப் போராடி, அறிவியல் துணைக்கொண்டு நம் இனத்தின் தொன்மையை நிறுவி வருகிறோம்!

இருந்தும் ஏற்க மறுக்கின்றன சில மனங்கள். திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை!

நாளை (ஜூன் 18) மதுரை வீரகனூரில், திமுக மாணவர் அணி நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கூடி ஒன்றிய அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்துவோம்! அவர்களைத் திருத்துவோம்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories