தமிழ்நாடு

சென்னை மாநகராட்சியில் துப்புரவு ஆய்வாளர் பணி.. MBA பட்டதாரியிடம் ரூ.26 லட்சம் மோசடி - பாஜக பிரமுகர் கைது!

ஆணையர் கையெழுத்தை போலியாக போட்டு போலி பணி நியமன ஆணை வழங்கிய பாஜக பிரமுகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் துப்புரவு ஆய்வாளர் பணி.. MBA பட்டதாரியிடம் ரூ.26 லட்சம் மோசடி - பாஜக பிரமுகர் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன் (72). இவர் தனது வீட்டருகே வசிக்கும் அதிமுக பெண் பிரமுகர் லதா என்பவரிடம் கடந்த 2023 ஆம் ஆண்டு தனது மகன் வெங்கடாசலம் (33) என்பவருக்கு சென்னை மாநகராட்சியில் (commission inspection) AE அல்லது A ஸ்கொயர் வேலை வாங்கி தருமாறு கூறியுள்ளார்.

எனவே அதிமுக பிரமுகர் லதா, ராமசுப்பிரமணியன் மற்றும் அவரது மகன் இருவரையும் சென்னை மாநகராட்சி அலுவலக வாயிலுக்கு வரவழைத்து சிந்தாரிப்பேட்டையை சேர்ந்த பாஜக பிரமுகரும் முன்னாள் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயசந்திரன் (43), அதே பகுதியை சேர்ந்த ஜெராக்ஸ் கடை ஊழியர் ரேவதி (45), மற்றும் ஜோஷிதா (28) ஆகியோரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

சென்னை மாநகராட்சியில் துப்புரவு ஆய்வாளர் பணி.. MBA பட்டதாரியிடம் ரூ.26 லட்சம் மோசடி - பாஜக பிரமுகர் கைது!

பின்னர் அந்த நான்கு பேரும் சேர்ந்து ராமசுப்பிரமணியத்திடம் அவரது மகனுக்கு மாநகராட்சி அலுவலகத்தில் நீங்கள் சொன்ன வேலை வாங்கி தருவதாகவும் அதற்கு ரூ.27 லட்ச செலவாகும் என்றும் கூறியுள்ளனர். இதனை நம்பிய ராமசுப்பிரமணியனும், ஜெயச்சந்திரன், ஜோஷிதா, லதா, ரேவதி ஆகிய 4 பேரிடம் 27 லட்ச ரூபாயை கொடுத்துள்ளார்.

பணத்தை பெற்றுக் கொண்ட இந்த கும்பல் ராமசுப்பிரமணியனிடம் உங்கள் மகனுக்கு சி.ஐ வேலை கிடைத்து விட்டது என்று கூறி போலியான பணி நியமன ஆணை வழங்கியதுடன் மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு, சேப்பாக்கம் ஆகிய பகுதிகளில் குப்பை தொட்டிகளை சோதனை செய்யும் வேலை என்று சொல்லி போலியான ஒரு வேலையை உருவாக்கி 30 முதல் 40 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

ஜோஷிதா
ஜோஷிதா

பின்னர் மாதம் மாதம் சம்பளம் என கூறி ஒரு தொகையை நேரடியாக வெங்கடாசலத்திடம் கொடுத்து வந்துள்ளனர். இதனை அடுத்து கடந்த 30/5/25 அன்று இந்த நான்கு பேரும் ராமசுப்பிரமணியன் மகன் வெங்கடாசலத்தை சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்திற்கு வரவழைத்து ஒரு கவரில் 7 லட்சம் வீதம் இரண்டு காசோலையை கொடுத்து மாநகராட்சி கருவூலத்தில் செலுத்துமாறு தெரிவித்துள்ளனர்.

வெங்கடாசலம் காசோலையை வீட்டிற்கு எடுத்துச் சென்ற நிலையில் அது காணாமல் போனதால் வெங்கடாசலம் இது குறித்து அவர்களிடம் தெரிவித்துள்ளார்.

உடனே அந்த நான்கு பேரும் மகன் வெங்கடாசலத்திடம் காணாமல் போன காசோலை தொகை 14 லட்ச ரூபாயை நீ தான் தரவேண்டும் என்றும் இல்லையென்றால் உன்னை சும்மா விடமாட்டோம் என மிரட்டல் விடுத்தனர். இதனால் பயந்து போன வெங்கடாசலம் இது குறித்து தனது தந்தை ராமசுப்பிரமணியனிடம் கூற, உடனே அவர் அந்த நபர்களை தொடர்பு கொண்ட போது பணம் தராவிட்டால் உன் மகனை போலீஸில் பிடித்து கொடுத்து விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

பின்னர் 6/6/25 அன்று நான்கு பேரும் வெங்கடாசலத்தை மாநகராட்சி அலுவலகத்திற்கு வரவழைத்து ஆட்டோவில் அமர வைத்து கொண்டு அவரது தந்தைக்கு போன் செய்து 14 லட்சம் பணத்தை தருமாறு கேட்டு மிரட்டல் விடுத்ததால் ராமசுப்பிரமணியன் உடனே 4 லட்ச ரூபாய் தருவதாகவும் ஒப்புக்கொண்டு மாலை பணத்துடன் வருவதாக தெரிவித்துள்ளார்.

ரேவதி
ரேவதி

இதனால் பாதிக்கப்பட்ட ராமசுப்பிரமணியன் தனக்கு தெரிந்த வழக்கறிஞர்கள் இருவரை அழைத்துக்கொண்டு மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து விசாரித்த போது அந்த கும்பல் மோசடி கும்பல் என தெரியவந்தது. உடனே அந்த வழக்கறிஞர் அங்கிருந்த ஜெயச்சந்திரன், ரேவதி, ஜோஷிதா ஆகிய மூன்று பேரை பிடித்து பெரியமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தியதில் அந்த கும்பல் சென்னை மாநகராட்சி ஆணையரின் கையெழுத்தை போலியாக போட்டு போலி பணி நியமன ஆணைகளை வழக்கி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.. இதனை அடுத்து போலீஸார் பாஜக பிரமுகர் ஜெயசந்திரன், ஜெராக்ஸ் கடை ஊழியர் ரேவதி, மற்றும் ஜோஷிதா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள அதிமுக பெண் நிர்வாகி லதாவை போலீஸார் தேடி வருவதுடன் இந்த மோசடி குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர் விசாரணையில் இந்த கும்பல் 20-க்கும் மேற்பட்ட நபர்களிடம் மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக கூறி 1.50 கோடி ரூபாய்க்கு மேல் பணம் பெற்று போலி பணி நியமன ஆணைகளை வழங்கி மோசடியில் ஈடுபட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இந்த மோசடி வழக்கில் கௌரி, வெங்கடேஷ் ஆகிய வேறு இருவருக்கும் தொடர்பு இருப்பதை கண்டு பிடித்த போலீஸார், தலைமறைவாக உள்ள லதா, கௌரி, வெங்கடேஷ் ஆகிய மூவரை தேடிவருகின்றனர். மேலும் இந்த கும்பலால் பாதிக்கப்பட்ட நபர்கள் காவல்துறையினர் புகார் அளிக்குமாறு போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories