தமிழ்நாடு

“மாநில திட்டக்குழுவின் ஆய்வறிக்கையும், அதன் சாரம்சமும் இது தான்!” : பேராசிரியர் ஜெயரஞ்சன் சொல்வது என்ன?

மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட 4 அறிக்கைகளை முதலமைச்சரும், மாநில திட்டக் குழுவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களிடம் இன்று (9.6.2025) தலைமைச் செயலகத்தில் சமர்ப்பித்தார்.

“மாநில திட்டக்குழுவின் ஆய்வறிக்கையும், அதன் சாரம்சமும் இது தான்!” : பேராசிரியர் ஜெயரஞ்சன் சொல்வது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

மாநில திட்டக்குழுவின் செயல் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன் அவர்கள், மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட 4 அறிக்கைகளை முதலமைச்சரும், மாநில திட்டக் குழுவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களிடம் இன்று (9.6.2025) தலைமைச் செயலகத்தில் சமர்ப்பித்தார்.

பிறகு செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி பின்வருமாறு,

இன்று காலையில் மாநில திட்டக் குழுவின் சார்பில் தயாரிக்கப்பட்ட 4 அறிக்கைகளை முதலமைச்சர் அவர்களிடம், மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவர் என்கின்ற வகையில் நானும், துணை முதலமைச்சரும், மாநில திட்டக் குழுவின் அலுவல்சார் துணைத் தலைவரும் இணைந்து வழங்கினோம்.

முதல் அறிக்கை – தமிழ்நாட்டில் இருக்கும் கிராமப்புறங்களில் ஏற்பட்டிருக்கும் வேளாண்துறை அல்லாத வேலை வாய்ப்புகள் அதில் எப்படி நடந்திருக்கிறது, எவ்வளவு அதிகமாகியிருக்கிறது, எவ்வளவு குறைந்திருக்கிறது என்பது குறித்த ஆய்வு.

இந்த ஆய்வு எப்படி மேற்கொண்டோம் என்றால், 10 வருடங்களுக்கு முன்பு நான் தனிப்பட்ட முறையில் ஒன்றிய திட்டக்குழுவிற்காக செய்த ஆய்வு. 12 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த 12 கிராமங்களில், வேளாண் துறையில் இல்லாத வேலை வாய்ப்புகள் பற்றி ஆய்வு செய்தோம். அதே கிராமங்களுக்குச் சென்று இந்த 10 வருடங்களின் இடைவெளியில் எதுபோன்ற மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பது குறித்து, ஒரு மீள் ஆய்வு மேற்கொண்டு அந்த ஆய்வின் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டு இன்று முதலமைச்சர் அவர்களிடம் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தோம்.

இரண்டாவது ஆய்வறிக்கை - sustainable development goals என்று சொல்லக்கூடிய வளம் குன்றாத வளர்ச்சி இலக்குகள் குறித்து ஐக்கிய அமைப்புகளின் வழிமுறைகளின்படி அறிக்கை தயாரிக்கப்பட்டு நம் தமிழ்நாடு தற்போது எங்கிருக்கிறோம். 2030-க்குள் அதற்கு சில இலக்குகள் இருக்கின்றன.

அந்த இலக்குகளை நாம் எவ்வளவு தூரம் அடைந்திருக்கிறோம். இன்னும் செல்ல வேண்டிய தூரம் எவ்வளவு என்பது பற்றி ஆய்வு செய்து அதற்கு பிறகு அந்த இலக்கை அடைய வேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும் என்பதையும் திட்டமிட்டு 650 பக்கத்திற்கு மேலான அறிக்கையை நமது முதலமைச்சர் அவர்களிடம் வழங்கியிருக்கிறோம். அதில் எதிலெல்லாம் முதலிடத்தில் இருக்கிறோம்.

எதிலெல்லாம் முன்னணியில் இருக்கிறோம், எதிலெல்லாம் நன்றாக வேலை செய்துகொண்டிருக்கிறோம். இன்னும் நாம் கவனிக்க வேண்டிய துறைகள் எது? என்பதையெல்லாம் கண்டறிந்து அதையும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு, அரசுக்கு அளித்துள்ளோம்.

“மாநில திட்டக்குழுவின் ஆய்வறிக்கையும், அதன் சாரம்சமும் இது தான்!” : பேராசிரியர் ஜெயரஞ்சன் சொல்வது என்ன?

மூன்றாவது அறிக்கை – உங்களுக்கு எல்லாம் நன்றாக தெரியும். தமிழ்நாடு வாகன உற்பத்தியில் முன்னிலையில் இருக்கும் மாநிலம். அந்த வாகன உற்பத்தியை அனைத்து தொழில்நுட்பத்திலும் ஏற்படக்கூடிய மாற்றங்கள் போல் வாகன உற்பத்தியிலும் மிகப்பெரிய அளவில் தொழில்நுட்ப மாற்றங்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன.

10, 15 வருடங்களுக்கு முன்பு காரை பார்த்தோம் என்றால், முழுவதும் Mechanical Device ஆக இருந்தது என்ற காலம் மாறி, இப்போது ஒரு கார் அல்லது மோட்டார் சைக்கிள் எடுத்துக்கொண்டோம் என்றால், பாதி தான் Mechanical, பாதி Electronics ஆக மாறி இருக்கிறது. அதில் இன்னும் அதிகமாகிக்கொண்டு தான் செல்லும் என்று எதிர்பார்க்கின்ற சூழலில், மின் வாகனமாக மாறிக் கொண்டிருக்கிறது. Hybrid வந்துக்கொண்டிருக்கிறது.

இப்படி பல தொழில்நுட்ப மாற்றங்கள் அசுர வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நேரத்தில், அதில் நாம் முன்னணி இடத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு நமது மாநிலம் என்னவெல்லாம் செய்ய வேண்டும், அதற்கான செயல்திட்டங்கள் என்னென்ன தேவைப்படுகின்றன என்பது குறித்து ஆய்வை நடத்தி, ஆய்வரங்கத்தை நடத்தி அதில் வந்திருந்த நிபுணர்கள் என்னவெல்லாம் கூறினார்கள் என்பதை தொகுத்து அதனை ஒரு அறிக்கையாக தயாரித்து நமது எதிர்காலம் வாகன உற்பத்தியில் என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்தும், அதற்கு உண்டான பாதை என்ன? வழி என்ன? வகை என்ன? என்பது குறித்தும் தெளிவாக எழுதி அதையும் ஒரு அறிக்கையாக அரசுக்கு சமர்ப்பித்திருக்கிறோம்.

நான்காவது அறிக்கை – Knowledge Academy என்று சொல்லக்கூடிய பெரும் பாய்ச்சலை தமிழ்நாடு நிகழ்த்த வேண்டும். இந்தியாவிலேயே உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் தான் அதிகம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

இந்திய அளவில் சராசரியாக 26% என்று சொன்னால், தமிழ்நாட்டில் 47% என்ற அளிவில் இருப்பதாக தான் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி இருக்கும்போது நமது மாணவர்களும், மாணவிகளும் உயர்கல்விக்கு போகும்போது சாதாரண வேலைவாய்ப்புகள் அல்லாமல், அவர்களுக்கு உண்டான உயர்ந்த வேலைவாய்ப்புகள்.

ஒருபக்கம் – சுமாராக படிப்பவர்களுக்கு அல்லது டிகிரி படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பும், Highly Technical Qualify ஆகியிருப்பவர்களுக்கு உயர்ந்த சம்பளம் வரக்கூடிய அதிக வருமானம் வரக்கூடிய வேலைவாய்ப்புகள். High Paying Job என்ற வாய்ப்புகள் வரக்கூடிய RND போன்ற துறைகளில் வேலை செய்யவதற்கு உலக அளவில் பெரிய, பெரிய நிறுவனங்கள் என்ன செய்கிறார்கள் என்றால், அவர்களின் ஆராய்ச்சிப் பணிகளை இந்தியாவை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஏன் என்றால், ஒன்று இங்கு Talent Pool அதிகமாக இருப்பது.

இரண்டாவது இவ்வளவு Talent இருக்கும் இடங்கள் உலகத்தில் வேறு எங்கும் இல்லை என்ற அடிப்படையில் இந்தியா உலகத்திற்கே உண்டான Global Capability Centres என்பது இந்தியாவில் பெரிய அளவில் நிறுவப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அதில், குறிப்பாக பெங்களூர், ஹைதராபாத், புனே போன்ற இடங்கள் முன்னணியில் இருக்கும்போது தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளாக நாம் பெருமுயற்சி செய்து 40, 50 என்று இருந்த Global Capability Centres-இன் எண்ணிக்கை இப்போது 150-க்கும் மேலாக உயர்த்தியிருக்கிறோம்.

அப்போது எதிர்காலம் இன்னும் என்னவான வாய்ப்புகளை வழங்குகிறது. அதற்கு நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும். இன்னும் பல நிறுவனங்களை எப்படி ஈர்ப்பது என்பது குறித்தும் அந்த ஆய்வை மேற்கொண்டு அந்த ஆய்வின் அறிக்கையும் கொடுத்திருக்கிறோம்.

மேற்கண்ட 4 அறிக்கைகள் தான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த நான்கு அறிக்கையும் ஒன்றாக இணைத்துப் பார்த்தீர்களென்றால், முதலமைச்சர் அவர்கள் வைத்திருக்கும் இலக்கான 1 டிரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கினை நோக்கி செல்வதற்கு வெவ்வேறு துறைகளில் நாம் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது என்பதையும், அதே சமயத்தில் 1 டிரில்லியன் பொருளாதாரம் அடையும்போது அது எல்லோருக்குமானதாக இருக்க வேண்டும்.

எல்லோரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதையும் உறுதி செய்வதற்காகதான் SDG (Sustainable Development Goals) அதற்கான ஆய்வறிக்கையும் தயாரித்து வழங்கியிருக்கிறோம். அது குறித்துதான் இன்று வழங்கியிருக்கும் ஆய்வறிக்கையும், அதன் சாரம்சமும் இது தான்.

banner

Related Stories

Related Stories