தமிழ்நாடு

“நகைக்கடனுக்கான புதிய கட்டுப்பாட்டை RBI திரும்பப் பெற வாய்ப்பு உள்ளது” - அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி!

நகைக்கடனுக்கு புதிய கட்டுப்பாடுகளை ஒன்றிய அரசு கொண்டு வருவதை தொடர்ந்து தமிழ்நாடு அரசு எதிர்க்கும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

“நகைக்கடனுக்கான புதிய கட்டுப்பாட்டை RBI திரும்பப் பெற வாய்ப்பு உள்ளது” - அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை பல்லவன் சாலையில் கூட்டுறவுத்துறையில் பல்வேறு கடன்கள், சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் சேவைகளை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மாநகரப் பேருந்துகளில் விளம்பர படுத்துதல் நிகழ்வினை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது :-

கூட்டுறவுத்துறை சீரான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்டதுபோல், இனி வரும் காலத்திலும் சிறப்பாக செயல்பட முடியும். மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகள் செயல்பாடு சிறப்பாக செயல்படுகிறது.

மேலும் விவசாய கடன்கள், சிறு தொழில் கடன்கள் வழங்குவதில் முதன்மையாக இருக்கிறது. ஒன்றிய அரசு கொண்டு வரும் நகைக்கடன் தொடர்பான புதிய கட்டுப்பாடு மக்களை பாதிக்கிறது. தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகளில் மக்கள் புதிய கணக்கு தொடங்கினால் தேவையான வசதிகள் செய்யவும் திட்டமிடபட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னையில் அரசு பேருந்துகளில் விளம்பரம் செய்யவும், பின்னர் மற்ற நகரத்திலும் செய்ய திட்டமிடபட்டுள்ளது.

நகைக்கடன் புதிய விதிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எதிர்ப்பு இருப்பதால் இதை அமல்படுத்தும் முன்பே ஒன்றிய அரசு திரும்ப பெற வாய்ப்பு உள்ளது." என்றார்.

banner

Related Stories

Related Stories