தமிழ்நாடு

”தினந்தோறும் திட்டப்பணிகளை ஆய்வு செய்து வருகிறோம்” : அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

தினந்தோறும் திட்டப்பணிகளை ஆய்வு செய்து வருகிறோம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

”தினந்தோறும் திட்டப்பணிகளை ஆய்வு செய்து வருகிறோம்” : அமைச்சர் சேகர்பாபு பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னை வால்டாக்ஸ் சாலை அருகே கட்டப்பட்டு வரும் ரத்த சுத்திகரிப்பு மையம் மற்றும் மறுவாழ்வு மையத்தினை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் சி.எம்.டி.ஏ சார்பில் கட்டப்பட்டு வரும்700 புதிய குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, ”வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பணிகள் தினந்தோறும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. திட்டப் பணிகளை தொடங்கிவைத்து அப்படியே அமைதியாக இருக்கும் ஆட்சி அல்ல இது. தினந்தோறும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அதை சிறப்பாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் ஆட்சிதான் எங்களது திராவிட மாடல் ஆட்சி.

மதுரையில் தரமான சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன என்பதை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளார். திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி 4% குறைக்கப்பட்டுள்ளது. இது வரவேற்க வேண்டிய ஒன்று. குறிப்பாக இது திரைப்படக் கலைஞர்களுக்கு ஒரு பலனாக இருக்கும்.

தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டு வரக்கூடிய அனைத்து திட்டங்களும் மக்களுக்கு நன்மை தரக்கூடிய வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது. இவை அனைத்து தரப்பு மக்களாலும் வரவேற்கக் கூடிய ஒன்று.

தற்போது கொரோனா தொற்று சற்று அதிகரித்துள்ளது. இதனால் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திருக்கோவில்களில் இலவசமாக பொதுமக்களுக்கு முகக்கவசங்கள் வழங்குவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories