தமிழ்நாடு

தமிழ்நாடு அரசின் இஸ்லாமிய தலைமை காஜி காலமானார் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் !

தமிழ்நாடு அரசின் இஸ்லாமிய தலைமை காஜி காலமானார் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாடு அரசின் இஸ்லாமிய தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் சாகிப் ( வயது 84) அவர்கள் நேற்று உடல் நலமில்லாத காரணத்தால் நேற்று உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ்நாடு அரசின் இஸ்லாமிய தலைமை காஜி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், "தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சாகிபு அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.

தமிழ்நாடு அரசின் இஸ்லாமிய தலைமை காஜி காலமானார் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் !

கற்றறிந்த பேராசிரியரான அவர், தனது சமூகச் சேவைகளுக்காக என்றென்றும் நினைவுகூரப்படுவார். தன்னுடைய பண்பால் இஸ்லாமிய சமூகத்தினரின் பேரன்பையும் பெருமதிப்பையும் பெற்றிருந்த அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். நான் ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலந்தொட்டு, என் மீது பேரன்பு செலுத்தியவர் அவர்.

மூப்பெய்திய போதும், நான் பங்கெடுக்கும் இப்தார் நிகழ்வுகள் அனைத்திலும் தன்னுடைய உடல்நலன் ஒத்துழைக்கும் வரையில் பங்கேற்பேன் என்று சொல்லிய அவரை இன்று இழந்து வாடுகிறோம். அவரது பிரிவால் வாடும் இஸ்லாமிய மக்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்"என்று கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories