தமிழ்நாடு

”கல்வியை இறுகப் பற்றிக்கொண்டு முன்னேறுங்கள்” : 10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து!

தமிழ்நாட்டில் இன்று 10,11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

”கல்வியை இறுகப் பற்றிக்கொண்டு முன்னேறுங்கள்” : 10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

10,11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை இன்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். இதில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 93.80% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இத்தேர்வில் மாணவர்கள் 95.88% தேர்ச்சி. மாணவிகள் 91.74% தேர்ச்சி. இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகள் 4.14 % கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் கடந்த ஆண்டுபொதுத் தேர்வை விட 2.25% இந்த ஆண்டு கூடுதலாக தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

அதேபோல் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 92.09% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 6.43% மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட 0.92% கூடுதலாக தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 10,11 ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவரது சமூகவலைதள பதிவில்,”10 மற்றும் 11-ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், உங்கள் கல்லூரி இலக்குக்குத் தேவையான பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுத்துப் படியுங்கள்!

பதினோராம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், இன்னும் அதிக மதிப்பெண்களைப் பெற்று பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற வாழ்த்துகள்.

இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாதவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்தடுத்த தேர்வுகள் உள்ளன; அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு தேர்ச்சி பெறுங்கள்; கல்வியை இறுகப் பற்றிக்கொண்டு முன்னேறுங்கள்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories