தமிழ்நாடு

11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு : 92.09% மாணவர்கள் தேர்ச்சி - முழு விவரம் இதோ!

11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு : 92.09% மாணவர்கள் தேர்ச்சி - முழு விவரம் இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 3 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார்.

அதில், பொதுத் தேர்வு எழுதிய 8,07,098 மாணவர்களில் 7,43,232 (92.09%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 6.43% மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட 0.92% கூடுதலாக தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

இத்தேர்வு முடிவில் 2,042 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் 282 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி. அதேபோல் கணினி அறிவியல் பாடத்தில் 3,535 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். மேலும் கணிதம் பாடத்தில் 1,338 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர்.

8446 மாணவர்கள் ஏதேனும் ஒரு பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இதில் அரசு பள்ளி மாணவர்கள் 582 பேர் அடங்குவர். தேர்வு எழுதிய 9,205 மாற்றுத்திறனாளி மாணவர்களில் 8,460 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் தேர்வு எழுதிய 125 சிறைவாசிகளில் 113 பேர் தேர்ச்சிப் பெற்று இருக்கிறார்கள்.

11 ஆம் வகுப்பு தேர்வு முடிவில் 97.76% தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. ஈரோடு மாவட்டம் 96.97% இரண்டாம் இடம். விருதுநகர் மாவட்டம் 96.23% மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

banner

Related Stories

Related Stories