தமிழ்நாடு

”ஒரு மதத்தின் மீது பழி போட்டு பொய்யான தகவலை பரப்பும் மதுரை ஆதினம்” : இந்து மக்கள் கட்சி கண்டனம்!

மதுரை ஆதினம் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல செயல்படுவதாக இந்து மக்கள் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

”ஒரு மதத்தின் மீது பழி போட்டு பொய்யான தகவலை பரப்பும் மதுரை ஆதினம்” : இந்து மக்கள் கட்சி கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒரு மதத்தின் மீது பழி போட்டு, தன்னை கொல்ல சதி என்று பொய்யான தகவலை பரப்பிய மதுரை ஆதினத்தை பதவி நீக்கம் செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்டத் தலைவர் சோலைக் கண்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:

சென்னையில் நடைபெற்ற சைவ சமய மாநாட்டிற்கு செல்லும் போது உளுந்தூர்பேட்டை அருகே வாகன விபத்து ஏற்பட்டதற்க் காரணம் நம்பர் பிளைட் இல்லாத குல்லா போட்ட தாடி வைத்தவர்கள் என்றும், ரெம்ப தூரம் துரத்தி வந்து பேரிகார்ட்டை உடைத்து வந்து எங்கள் கார் மீது மோதினார்கள் என்றும், நேர்மையானவர்களாக இருந்திருந்தால் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருப்பார்கள் ஆனால் மோதி விட்டு தப்பி ஓடி விட்டார்கள் என்றும் என்னை (ஆதினத்தை) கொல்ல சதி என்றும் மதுரை ஆதினம் பேட்டி அளித்திருந்தார்.அதனை கண்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்.

ஆனால் காவல்துறை மூலமாக தற்பொழுது அந்த வாகன விபத்து நடந்த வீடியோ ( CCTV) வெளியிட்டு தற்போது வைராலாகி உள்ளது. அந்த வீடியோவில் மதுரை ஆதினம் வந்த வாகனமும்,ஆதின வாகனத்தின் மீது மோதிய வாகனமும் இரு வழி பாதையில் வரும் போது நான்கு வழி சாலை பிரிவு சந்திப்பில் ஆதினம் கார் பின்னால் வந்த வாகனம் லேசாக உரசி உள்ளது என்று அந்த வீடியோவை உற்று ஆய்வு செய்யும் பொழுது உண்மை நிலை நன்றாக தெரிய வருகிறது.

இதில் ஆதினம் வந்த வாகனம் மிக வேகமாக சென்ற பொழுது தான் விபத்து ஏற்பட்டுள்ளது.உடனே இதனை பெரிய பிரச்சனை ஆக்கி என்னை கொல்ல தாடி வைத்த குல்லா போட்ட மத தீவிரவாதிகள் சதி திட்டமிட்டுள்ளார்கள் என்று மதுரை ஆதினமடத்தின் புனிதத்தை கெடுக்கும் விதமாகவும் மதபிரச்சனையை உண்டாக்கும் விதமாகவும் ,மதுரை ஆதினமாக இருந்து கொண்டு வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு பொய்யான விசப் பேச்சை பரப்பி மக்கள் மத்தியில் மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கிய 293வது மதுரை ஆதினமாக இருக்கும் ஞானசம்பந்த தேசிய பரமாச்சியாருக்கு இந்துமக்கள்கட்சி வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது

மத தீவிரவாதிகள் மதுரை ஆதினத்தை எதற்காக கொல்ல வேண்டும் தீவிரவாதத்தை எதிர்த்து அப்படி என்ன ஆதினம் பேசி விட்டார் தீவிரவாதிகள் கொல்ல வேண்டுமென்று நினைத்தால் இப்படி அறையும் குறையுமாக சிறிய விபத்தை ஏற்படுத்தி விட்டு செல்ல மாட்டார்கள்.யாரையாவது கொல்ல வேண்டுமென்று மததீவிரவாதிகள் நினைத்தால் அவர்களை குறி வைத்து கொன்று விட்டுத்தான் செல்வார்கள்.அதற்கு உதாரணம் இந்து இயக்கத்தலைவர்கள் படுகொலை. பஹல்ராம் தாக்குதல்.

என் வாகனத்தின் மீது இடித்தவர்கள் நேர்மையானவர்களாக இருந்திருந்தால் காவல்நிலையத்தில் புகார் அளிக்காமல் தப்பி சென்று விட்டார்கள் என்று கூறும் ஆதினம் அவர்கள், தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார் அளிக்கவில்லை ? ஆதினத்தின் பேச்சில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளது

மதுரை ஆதினத்தின் கொலை முயற்சி குற்றச்சாட்டு கூறிய ஆதினத்தின் மீது பல்வேறு சந்தேகங்களும் மர்மங்களும் எழுகிறது. மதுரை ஆதினம் அவர்கள் ஒரு மதத்தின் மீது பழி போட்டு ஒரு தவறான பொய்யான குற்றச்சாட்டால் மதுரை ஆதினமடத்திற்கு மட்டுமல்ல திருஞானசம்பந்தர் பக்தர்களாகிய எங்களுக்கும் அவமானமாக உள்ளது.

இதற்கு முன்பாக ஆதினத்தின் டிரைவர் மீதும்,குத்தகை தாரர்கள் மீதும் என்னை கொல்ல சதி நடக்கிறது என்று இதே ஆதினம் கொலை குற்றச்சாட்டு கூறினாரே தவிர இந்த கொலை மிரட்டல் சம்பந்தமாக யார் மீதும் இதுவரையில் முறையாக காவல்துறையிடம் மதுரை ஆதினம் புகார் அளிக்க வில்லை. இது போன்று பொய்யான கொலை முயற்சி குற்றச்சாட்டை ஒரு மதத்தின் மீது சம்பந்தமில்லாமல் சுமத்தி குழப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்துவது மதுரை ஆதினமாக இருக்கும் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.

காவல்துறை பாதுகாப்பிற்காகவோ அல்லது விளம்பர நோக்கத்திற்காகவோ மதுரை ஆதினத்தை பின்னால் இருந்து தவறாக யாரெனும் இயக்குவது போல் தெரிகிறது. மதுரை ஆதினத்திற்கு பின்னால் ஒரு சதிகார கூட்டமே இருக்கிறது. சமீபகாலமாக மதுரை ஆதினமடத்தை களங்கப்படுத்தும் விதமாகவும்,மடத்தின் புனிதத்தை அவமானப்படுத்தும் விதமாகவும் அவரது நடவடிக்கைகளையும்செயல்பாடுகளையும் பார்க்கும் பொழுது மதுரை ஆதினம் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தெரிய வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி மனநலம் பாதிக்கப்பட்டவரோ, குற்றச்சாட்டுக்கு உள்ளானவரோ மதுரை ஆதினமாக இருக்க தகுதியற்றவர். எனவே மதுரை ஆதினமடத்திற்கு இந்து சமய வளர்ச்சிக்காகவும், இந்து சமயத்தை பாதுகாக்கவும், இந்துசமய ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்வதற்காகவும் மன்னர்கள், ஜமீன்தார்கள், செல்வந்தர்கள் என தானமாக கொடுத்த சுமார் 1000 கோடிக்கு மேல் இருக்கும். மதுரை ஆதின மரபுகளை மீறி தான்தோன்றி தனமாக மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் மதுரை ஆதினமாக செயல்படும் 293வது திருஞானசம்பந்த தேசிய பரமாச்சாரியராக மதுரை ஆதினமடத்தில் மடாதிபதியாக வகிக்க தகுதியற்றவர். அவரை உடனடியாக மதுரை ஆதினம் பதவியிலிருந்து பதவி நீக்கம் செய்ய வேண்டுமென விரைவில் இந்துமக்கள்கட்சி ஏற்பாட்டின் பேரில் அனைத்து இந்து அமைப்புகளையும், சைவ ஆதினங்களையும் ஒன்றிணைத்து ஆலோசணை கூட்டம் நடைபெறும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories