தமிழ்நாடு

"உலக நாடுகளே தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பை பாராட்டுகிறது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் !

"உலக நாடுகளே தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பை பாராட்டுகிறது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் சென்னை மருத்துவ கல்லூரி சார்பில் MIRACLE 25 இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான முதல் தேசிய மாநாடு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, உத்திர உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களைச் சேர்ந்த 112 கல்லூரிகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவ, மாணவிகள் கலந்து கொண்டார்கள்.

இந்த மாநாட்டில் பல்வேறு துறை சார்ந்த மருத்துவத்துறை வல்லுனர்கள் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றினார்கள். நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவ மாணவ மாணவிகள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "இதற்கு முன் இந்தியாவில் இது போன்ற மாநாடு நடந்துள்ளதா? என்று கேட்டபோது இதுவரை மருத்துவம் சார்ந்த இது போல் நடந்தது இல்லை என்றார்கள். தமிழ்நாட்டில் 8713 துணை சுகாதார நிலையங்கள், 762 வட்டார மருத்துவ மையங்கள், 36 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் என 11,876 மருத்துவ கட்டமைப்புகள் உள்ளது.

"உலக நாடுகளே தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பை பாராட்டுகிறது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் !

இந்தியா மட்டுமல்ல உலக நாடுகள் பல தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பை பாராட்டுகிறது. 2021 ஆகஸ்ட் மாதம் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அப்போது ஒரு கோடி என்ற இலக்கை இந்த திட்டம் எட்ட வேண்டும் என்று முதல்வர் சொன்னார். ஆனால், இந்த திட்டம் 2 கோடியே 24 லட்சம் பயனாளிகளை கடந்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் மருத்துவத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரக்கூடிய திட்டங்கள் இந்தியாவுக்கு வழிகாட்டக்கூடிய திட்டங்களாக உள்ளது. தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பு மிக சிறப்பான இடத்தில் உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கொண்டு வரப்படக்கூடிய திட்டங்கள் உலகத்திற்கு வழிகாட்ட கூட கூடிய திட்டங்களாக உள்ளது.

banner

Related Stories

Related Stories