தமிழ்நாடு

"கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் !

"கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள மாந்தோப்பு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் சைதை மேற்கு பகுதி 140 வது வார்டில் கோடம்பாக்கம் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி அம்மா பூங்கா ரூபாய் 3 கோடியே 64 லட்சம் மதிப்பீட்டிலான புனரமைக்கும் பணியினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்து பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களை பார்வையிட்டார்...

அதனைத் தொடர்ந்து அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சி அம்மா பூங்கா ரூ.3 கோடியே 64 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

"கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் !

பூங்காவில் புதிய நுழைவு வாயில், கழிவறைகள், முதியோர்களுக்கான சிறப்பு வழிதடம், குழந்தைகள் விளையாடும் இடம், என பல்வேறு சிறப்பம்சங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் மூன்று மாதங்களில் முழுமையாக நிறைவு பெறும்.

கோடை வெப்பத்தினை கருத்தில் கொண்டு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் எவ்வாறு தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என துண்டு பிரசுரங்கள் வாயிலாகவும் , நிகழ்ச்சி வாயிலாகவும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது"என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories