மே 2021ம் ஆண்டு முதல் மார்ச் 2025 வரையிலான நான்காண்டுகளுக்குள் ரூ.10,14,368 கோடி முதலீட்டு பொறுப்புறுதியுடன் பல்வேறு உலகளாவிய முன்னணி நிறுவனங்கள் உள்ளிட்ட 895 முதலீட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தொழில்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் தொழில்துறை வல்லமையையும், பணியாளர்கள் இருப்பையும் வெளிப்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ன் போது 26.91 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ரூ.6.64 லட்சம் கோடி முதலீட்டு பொறுப்புறுதிகளுடன் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பொருளாதார மற்றும் சமூக பயன்களை மாநிலம் பெரும் விதமாக வழிகாட்டி நிறுவனம் திட்டங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதில் முக்கிய கவனம் செலுத்தி வருவதாகவும் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.