தமிழ்நாடு

முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு... பொதுமக்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

முகூர்த்தம்  மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு... பொதுமக்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

25/04/2025 (வெள்ளிக்கிழமை) முகூர்த்தம் 26/04/2025 (சனிக்கிழமை) மற்றும் 27/04/2025 (ஞாயிறுக் கிழமை) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

=>அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து...

திருவண்ணாமலை, திருச்சி, 25/04/2025 (வெள்ளிக்கிழமை) அன்று 370 பேருந்துகளும், 26/04/2025 (சனிக்கிழமை) 450 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

=> சென்னை கோயம்பேட்டிலிருந்து...

திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 25/04/2025 வெள்ளிக் கிழமை அன்று 60 பேருந்துகளும் 26/04/2025 சனிக்கிழமை அன்று 60 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முகூர்த்தம்  மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு... பொதுமக்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

=>மாதாவரத்திலிருந்து...

26/04/2025 அன்று 20 பேருந்துகளும் 26/04/2025 அன்று 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது .

இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 7,970 பயணிகளும் சனிக்கிழமை 5,115 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 7,189 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories