தமிழ்நாடு

”100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!

100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

”100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று கேள்வி நேரத்தின் போது, சாதனை படைத்த விளையாட்டு வீரர்களுக்கான மூன்று சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் இந்த ஆண்டும் பணி நியமன ஆணைகள் வழங்க அரசு முன்வருமா? என சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,"3% இட ஒதுக்கீட்டின் கீழ் கடந்த ஆண்டு மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 104 பேருக்கு கடந்த ஆண்டு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு மேலும் 100 வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்.

11 விளையாட்டு வீரர்களுக்கு கடந்த ஆண்டு காவல்துறையில் பணி வழங்கப்பட்டுள்ளது. தற்போது 32 உதவி ஆய்வாளர்கள் பணிக்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு காவல்துறையில் பணி கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

மாற்றுத்திறனாளி முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசு தொடர்ந்து திட்டங்களை தீட்டப்பட்டி வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நியமனம் செய்வதற்காக சட்ட முன் வடிவை இந்த சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.

இதன்மூலம், இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாதவகையில் முதல்முறையாக தமிழ்நாட்டில் 13 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சிப் பொறுப்புகளில் அமர இருக்கிறார்கள். அதேபோல் விளையாட்டு துறையில் மாற்றுத்திறனாளிகள் சாதிக்க இந்த அரசு தொடர்ந்து துணை நிற்கும்.

198 பாரா ஒலிம்பிக் வீரர்களுக்கு ரூ.4 கோடி 55 லட்சம் சாம்பியன் ஃபவுண்டேஷன் மூலம் பயணச் செலவு மற்றும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 196 பாரா ஒலிம்பிக் வீரர்களுக்கு ரூ. 27 கோடி ஊக்கத்தொகை நிதி வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories