தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக வகைசெய்யும் அரசினர் (திருத்தச்) சட்டமுன்வடிவுகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, வரலாற்று சிறப்பு முக்க இந்த சட்டமுன்வடிவுக்கு மாற்றுத்திறனாளிகள் அனைவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், டிசம்பர் மூன்று இயக்கத்தின் மாநிலத் தலைவர் தீபக் நாதன் தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசியது வருமாறு:-
மாற்றுத்திறனாளிகள் “ஏழை சொல் அம்பலம் ஏறாது” என்று பல நேரங்களில் நாங்கள் பொருமியதுண்டு, மனதில் வருத்தங்கள் உண்டு. கிராமப்புறங்களில் ஒரு கழிவறை இல்லை என்றும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு கழிவறை இல்லையே என்றும் - இது ஏன் இங்கு இல்லை என்று நாங்கள் அடிக்கடி கேள்வி எங்களுக்குள்ளேயே கேள்விக் கேட்டுக் கொள்வோம். அப்போது இதையெல்லாம் முடிவு எடுக்கும் இடத்தில் மாற்றுத்திறனாளிகள் இல்லாமல் இருப்பதால்தான் “out of sight is out of mind” கண்ணில் படாத வரைக்கும் நெஞ்சத்தில் நிலைக்காது என்று சொல்வார்கள்.
அந்த வழியில் நாங்கள் எல்லாம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக அணுகத்தக்கதாக விஷயங்கள் மாற வேண்டும் என்றால், முடிவு கேட்கின்ற இடத்திலிருந்து - கொடுக்கின்ற இடத்திற்கு வரவேண்டும். அப்படி நடந்தால்தான் மாற்றுத்திறனாளிகளுக்கு அணுகத்தக்கதாக விஷயங்கள் மாறும் என்று நாங்கள் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்தோம்.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மிக முக்கியமாக இன்று வரலாற்றில் மிக முக்கியமான நாளாக இந்தியாவில் முதன்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்காக அரசியல் பங்கேற்பை உறுதி செய்ய வேண்டும் என்று ஐநா மாற்றுத்திறனாளிகள் உரிமை உடன்படிக்கை சரத்து 29 உச்சரித்து மிகத் தெளிவாக சொல்கிறது. மாற்றுத்திறனாளிகள் எங்கு வரவேண்டும்…. முடிவெடுக்கும் இடத்திற்கு வந்தால் தான், அவர்கள் உரிமை உண்மையாகும். உரிமைகள் உண்மையாக வேண்டுமென்றால் அவர்கள் பக்கத்திலேயே இருக்கக் கூடிய Local Governmet-இல் அவர்கள் உறுப்பினர்களாக மாற வேண்டும். மாறினால் தான் மாற்றங்கள் வரும் என்பதை ஐநா சபையின் Incheon Strategy 2012 மற்றும் 2023 மிகத் தெளிவாகச் சொல்கிறது.
இதையெல்லாம் கோடிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பார்வைக்கு எடுத்துச் செல்கின்ற பொழுது இந்தியாவின் முதல் முறையாக கிட்டத்தட்ட 15,000 மாற்றுத்திறனாளிகள் கவுன்சிலராக செல்கிறார்கள். இதுதான் இங்கு மிகப் பெரிய விஷயம். கம்யூனிட்டி எலக்ஷனில் தேர்தலில் நிற்காமல் Community-based rehabilitation (CBR) . அதாவது, அவர்கள் வாழ்கின்ற இடத்திலேயே மறுவாழ்வு கொடுக்க வேண்டும். அவர்களின் பகுதியில் ஒரு வீல் சேர் வாங்க வேண்டும் என்றால் நாங்கள் மாவட்டத்தின் கடை கோடியில் இருந்து மாவட்டத்தின் தலைநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். ஆனால், இந்த விஷயங்கள் நடைமுறைக்கு வருகின்ற பொழுது எங்களுடைய வீல்சேரை எங்களுடைய பஞ்சாயத்திலேயே வாங்கும் வாய்ப்பினை இந்த அறிவிப்பும், இந்த சட்ட திருத்தத்தமும் உண்மையாக்க போகிறது. அதுதான் இதில் மிகப்பெரிய விஷயம்.
ஏனென்றால், துணை முதலமைச்சர் அவர்கள் தான் இதை முதலில் பேசினார்கள். மாற்றுத் திறனாளிகளுக்கான சட்டம் அவர்களின் முதல் பேச்சிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் பங்கேற்பு கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள். இப்போது, ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி இத்தனை இடங்களிலும் மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் நிற்காமலேயே ஒரு மாற்றுத்திறனாளி அந்த நகரத்தில் கிராமத்தில், பஞ்சாயத்தில், பஞ்சாயத்து ஒன்றியத்தில், மாவட்ட பஞ்சாயத்தில் ஒரு உறுப்பினராக எங்களது மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு கழிவறை கட்டுங்கள். நீங்கள் திருமண மண்டபம் கட்டுகிறீர்கள், அதில் எங்களுடைய மாற்றுத் திறனாளிகள் செல்லும் வகையில் கட்டுங்கள் என்று பேசுவதற்கும், ஆட்சி அதிகாரங்களில் எங்களுடைய குரல்கள் ஒலிக்கப் போகிறது என்பது எவ்வளவு பெரிய விஷயம்.
இது உண்மையிலேயே ஒரு மிகப்பெரிய சகாப்தத்தை இந்த அரசு தொடங்கி வைத்திருக்கிறது. மற்றவை எல்லாம் அரசியலாக இருக்கலாம்.
ஆனால், மாற்றுத்திறனாளிகள் குறித்து - தந்தை பெரியார் அவர்கள் ரஷ்யாவுக்கு செல்லும்போது மிகத் தெளிவாக சொன்னார்களாம். உங்களது சிறைச்சாலை எப்படி இருக்கிறது என்று நான் பார்க்க வேண்டும். அதை எப்படி நீங்கள் பராமரிக்கிறீர்களோ…. அதை வைத்து தான் இங்கு அரசு எப்படி நடைபெறுகிறது என்பதை எடை போடுவேன் என்று கூறினார்களாம்…. இன்றைக்கு தந்தை பெரியார் இருந்தால் மாற்றுத்திறனாளிகளுக்கு நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்று கேட்பார். நிச்சயம் கேட்பார். அப்படி பார்க்கும் பொழுது மாற்றுத்திறனாளிகளுக்கு கடற்கரையில் ஒரு சாய்வு பாதை. அதை நாங்கள் கேட்டுக் கேட்டு வாங்கினோம். அப்பொழுது இன்றைக்கு மாற்றுத்திறனாளிகள் ஒருவர் ரிப்பன் மாளிகையில் மாற்றுத்திறனாளிகளுக்காக கவுன்சிலராக பேசப் போகிறார் என்ற அந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
உள்ளபடியே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு டிசம்பர் 3 இயக்கத்தின் சார்பாக, ஏனென்றால் நான் அவரை சென்று பார்க்கும் பொழுது, இன்றைக்கு கூட சட்டமன்றத்தில் அவர் பேசும் பொழுது மிக அழகாக – மாடையிலிருந்து தீபக் அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார். பேராசிரியர் தீபக் நாதனை அடுத்தநாள் காலையில் வந்து சந்தித்து நீங்கள் செய்ததிலேயே இதுதான் டாப் என்றும், இன்றைக்கு காலையில் இந்தியா முழுவதும் இருந்து மாற்றுத்திறனாளிகள் எங்களுக்கு தொடர்பு கொண்டு இன்றைக்கு சட்டமன்றத்தில் நிறைவேறுகிறதா…… தமிழ்நாடு போன்றே எங்களது ஊரிலும் மாற்றுத்திறனாளிகள் கேட்கப் போகிறோம்.
ஏனென்றால், எவ்வளவு தூரம் நாங்கள் போராடி வந்திருக்கிறோம் என்றால், இந்த நகராட்சி உள்ளாட்சி சட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நிற்க முடியாது என்று ஒரு சரத்து இருந்தது. அதை முதலில் எடுத்தோம். பிறகு மாற்றுத்திறனாளிகள் நிற்க முடியும் என்று பெற்றிருக்கிறோம். இப்பொழுது மாற்றுத்திறனாளிகளுக்காக பதவி வாங்கி இருக்கிறோம். இது நீண்ட நெடியப் போராட்டத்தில் அற்புதமான விஷயம். இதை உறுதியாக்கிய, சாத்தியமாக்கிய தலைவர் கலைஞர் வழியில் திராவிட மாடல் அரசு இது திராவிடம் சமூக நீதி என்றால் உடம்பால் ஊனமுற்றோர்களுக்கான நீதியும் சேர்த்து அதில் இருக்கிறது என்பதுதான் அர்த்தம். சமூகத்தால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல. உடம்பால் ஊனமுற்றவர்களுக்கான நீதியும் சேர்த்து வணங்கினால் தான் அந்த சமூக நீதி 360 டிகிரி வரும். இன்றைக்கு 360 டிகிரியை இந்த அரசு தொட்டிருக்கிறது. இது திராவிட மாடல் அரசுக்கும் சரி - மு.க. ஸ்டாலின் அய்யா அவர்களுக்கும் சரி - தலைவர் கலைஞர் அவர்களுக்கும் சரி - வரலாற்றில் இன்றைக்கு நாங்கள் இந்த சந்தோஷத்தில் பேச முடியாமல் இருக்கலாம். ஆனால், இனி 50 ஆண்டு காலம் - நூறு ஆண்டு காலத்திற்கு இந்தியாவில் முதன்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தை ஐநா சபை சொல்லியிருக்கக் கூடிய அந்த விஷயத்தை இன்றைக்கு உறுதியாக்கி உண்மையாக்கியிருக்கிறார் கலைஞர் அவர்களின் மகன் மு.க.ஸ்டாலின் அய்யா அவர்கள்.
Thank You So Much Thiru. Stalin Sir….. We Love You Sir….. Thank You is a small word Sir…. Sir Thank You என்று சொன்னால் போதாது….. அய்யா… எங்களது கடைகோடி மாற்றுத்திறனாளி ஒருவன் அவர் பேசுவது என் கண்ணில் தெரிகிறது. அதற்கு நீங்கள் தான் காரணம் என்பதை இந்த வரலாறு சொல்லும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.