தமிழ்நாடு

போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்கும் AI கேமராக்கள்: குறையும் விபத்துகள்... போக்குவரத்து போலீசார் அதிரடி!

போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்கும் AI கேமராக்கள்: குறையும் விபத்துகள்... போக்குவரத்து போலீசார் அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாட்டில் போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்கும் வகையில் போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகினறனர். தேவைப்படும் இடங்களில் சிக்னல்களை அமைத்தும், சிக்னல்களை நீக்கியும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சென்னை சாலைகளில் போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்கும் வகையில் ஏ.ஐ கேமராக்களை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஜிஎஸ்டி சாலை, அண்ணா சாலை, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த கேமராக்கள் நிறுவப்படுகின்றன...

போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்கும் AI கேமராக்கள்: குறையும் விபத்துகள்... போக்குவரத்து போலீசார் அதிரடி!

இந்த நவீன கேமராக்கள் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளின் வாகன பதிவு எண்களை துல்லியமாக படம் பிடித்து அதை போக்குவரத்து போலீசாருக்கு அனுப்பி வைக்கும். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு விதிமீறும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சம்பந்தப்பட்ட நபர்களின் செல்போனுக்கே போலீசார் அனுப்பி வைப்பார்கள்.

அத்துடன் அபராத செலானையும் இணைத்து அனுப்பி விடுவார்கள். இதன் காரணமாக சென்னையில் போக்குவரத்துக்கு விதிகளை மீறுவது குறைந்து வருகிறது. அதோடு போலீசாரின் அதிரடி நடவடிக்கை எடுத்த காரணத்தால் சென்னையில் விபத்துகள் கணிசமாக குறைந்துள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories