தமிழ்நாடு சட்டப்பேரவையில், விதி எண் 110-ன் கீழ், மீனவர் நலன் சார்ந்த அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
மீனவர்கள் சிக்கலைப் போக்க பல்வேறு கடிதங்களும், கோரிக்கைகளும் தமிழ்நாடு அரசின் சார்பில் ஒன்றிய அரசிடம் முன்வைக்கப்பட்டாலும், மீனவர் வஞ்சிப்பு தொடர்ந்து வருவதற்கு, பொருளாதார தீர்வு காணும் திட்டங்களை முன்மொழிவதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
ஒன்றிய பா.ஜ.க அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையிலிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை மீட்கவும், மீனவர் வாழ்வாதாரத்தை உறுதிசெய்யவும் முதலமைச்சர், தொழில் பயிற்சி, மீன்பிடி துறைமுகங்கள் என மொத்தம் ரூ.576.73 கோடி மதிப்பிலான திட்டங்களை பொதுவெளியில் அறிவித்தார்.
அதற்கு, நன்றி தெரிவிக்கும் வகையில், சட்டப்பேரவையில் பேசிய அரசியல் தலைவர்களின் கருத்துகள் பின்வருமாறு,
“ஒன்றிய பா.ஜ.க அரசு, தமிழ்நாடு மீனவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்ப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல், தாமாக மீனவர் நல அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார் முதலமைச்சர்.” - கொ.ம.தே.க பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்.
“ஒன்றிய அரசின் வஞ்சிப்பிற்கு இடையில், மீனவர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றும் அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார் முதலமைச்சர்.” - ம.நே.ம.க தலைவர் ஜவாஹிருல்லா.
“பிரதமர் மோடி, இலங்கை அதிபருடன் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்திருக்கிறார். இவை தமிழர்களை மேலும் வஞ்சிக்கும் வகையில்தான் அமைந்துள்ளன. ஆனால், வஞ்சிக்கப்படும் மக்களுக்கான சலுகைகளை வழங்கியிருக்கிறார் முதலமைச்சர்.” - ம.தி.மு.க சதன் திருமலை குமார்.