தமிழ்நாடு

”நான் இந்துதான்” : கலவரத்தை தூண்ட முயற்சித்து அம்பலப்பட்ட எச்.ராஜா - வீடியோ வெளியிட்ட நர்கீஸ்கான்!

”நான் இந்துதான்” : கலவரத்தை தூண்ட முயற்சித்து அம்பலப்பட்ட எச்.ராஜா - வீடியோ வெளியிட்ட நர்கீஸ்கான்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கும் முன்பும் சரி, வந்த பின்பும் சரி தங்களது முக்கிய அரசியலாக அவர்கள் பார்ப்பது, மத அரசியலைதான். அப்படி மத கலவரத்தை பல்வேறு மாநிலங்களில் உருவாக்கி வரும் பாஜக, தமிழ்நாட்டிலும் உருவாக்க பல முயற்சிகளை செய்து வருகிறது. அண்மையில் திருப்பரங்குன்றம் கோயில் விவகாரத்தை வைத்து மதக் கலவரத்தை பாஜக தூண்ட முயற்சி செய்தது.

தற்போது அதே போல் தஞ்சையில் உள்ள கோயில் ஒன்றில் அறங்காவலராக பணிபுரியும் நர்கீஸ்கான் என்பவரை இஸ்லாமியர் என்று வதந்தியை பரப்பி மதக் கலவரத்தை தூண்ட முயற்சித்துள்ளார் பாஜக நிர்வாகி எச்.ராஜா. இந்த சூழலில் அது முற்றிலும் தவறான தகவல் என்று TN Fact Check தெரிவித்துள்ளது.

”நான் இந்துதான்” : கலவரத்தை தூண்ட முயற்சித்து அம்பலப்பட்ட எச்.ராஜா - வீடியோ வெளியிட்ட நர்கீஸ்கான்!

இதுகுறித்து TN Fact Check தெரிவித்துள்ளதாவது,

“தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அமைந்துள்ள ரெகுநாதபுரம் கிராமம் அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயில் அறங்காவலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நர்க்கீஸ்கானின் தந்தை பெயர் தங்கராஜ். அவர் இஸ்லாமியச் சமுதாயத்தைச் சேர்ந்தவர் இல்லை. மிகச் சிக்கலான நிலையில் பிரசவம் பார்த்த மருத்துவர் நர்க்கீஸ்கானின் பெயரை அவருக்கு வைத்துள்ளார்கள்" என்று கோயில் செயல் அலுவலர் விளக்கமளித்துள்ளர்”

”நான் இந்துதான்” : கலவரத்தை தூண்ட முயற்சித்து அம்பலப்பட்ட எச்.ராஜா - வீடியோ வெளியிட்ட நர்கீஸ்கான்!

இந்த நிலையில், எச்.ராஜாவின் இந்த வதந்திக்கு அமைச்சர் சேகர்பாபு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன பதிவு வருமாறு :

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், ரெகுநாதபுரம், அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயில் அறங்காவலராக நியமிக்கப்பட்டுள்ள திரு.நர்கீஸ்கான், த/பெ. தங்கராஜ் என்பவர் இந்து மதத்தை சேர்ந்தவராவார். அவர் இஸ்லாம் மதத்தை சார்ந்தவர் அல்ல.தனது பிறப்பின்போது தாயார் மிக சிக்கலான நிலையில், இருந்ததால் அப்போது பிரசவம் பார்த்த மருத்துவரின் பெயரை தனக்கு வைத்ததாக திரு.நர்கீஸ்கான் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் அவர் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதற்கான சான்றுகளும் இணைக்கப்பட்டுள்ளன. எதனையும் தீர விசாரித்து, ஆராய்ந்து பார்க்காமல் அவசரக் குடுக்கையாக எடுத்தோம், கவிழ்தோம் என்ற முறையில் பாஜகவை சேர்ந்த எச்.ராஜா, துவேசமாக கருத்து தெரிவித்து பதிவிட்டிருப்பது அமைதிப் பூங்காவாக திகழும் தமிழகத்தில் மதக் கலவரத்தை உருவாக்கும் முயற்சியே. இந்த எண்ணம் திராவிட மாடல் ஆட்சியில் ஒருபோதும் ஈடேறாது. இத்தகையவர்கள் என்றுமே தமிழக மக்களால் புறக்கணிக்கப்படுவார்கள்.

banner

Related Stories

Related Stories