தமிழ்நாடு

“தமிழ்நாட்டில் MSME நிறுவனங்களுக்காக ஒன்றிய அரசு செய்தது என்ன?” : நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் கேள்வி!

தமிழநாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை (MSME) மேம்படுத்த ஒன்றிய அரசின் பங்களிப்பு என்ன? மக்களவையில் கழக நாடாளுமன்றக் குழுத் துணைத்தலைவர் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி!

“தமிழ்நாட்டில் MSME நிறுவனங்களுக்காக  ஒன்றிய அரசு செய்தது என்ன?” : நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை (MSME) மேம்படுத்த நிறுவப்பட்ட புதியதொழிற்பேட்டைகள் அல்லது வணிக காப்பகங்களின் எண்ணிக்கை எவ்வளவு? என மக்களவையில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும், கழக நாடாளுமன்றக் குழுத் துணைத்தலைவருமான தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.

அதன் விவரங்கள் பின்வருமாறு :

2019 முதல் தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்காக (MSME) அறிமுகப்படுத்தப்பட்ட குறிப்பிட்ட திட்டங்கள் மற்றும் நிதியுதவி திட்டங்கள் என்ன?

கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் MSME-களுக்கு வழங்கப்பட்ட நிதி விவரங்கள் என்ன?

“தமிழ்நாட்டில் MSME நிறுவனங்களுக்காக  ஒன்றிய அரசு செய்தது என்ன?” : நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் கேள்வி!

கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் MSME தொழில்துறை தொகுப்புகள் மற்றும் தொழில்துறை பூங்காக்களை உருவாக்க ஒன்றிய அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட புதிய MSME தொழிற்பேட்டைகள் அல்லது வணிக காப்பகங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

MSMEகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக தமிழநாட்டு அரசுடன் அமைச்சகம் இணைந்து பணியாற்றியுள்ளதா? அவ்வாறு இருந்தால், அதன் விவரங்களை தெரியப்படுத்தவும் என கழக நாடாளுமன்ற குழுத் துணைத்தலைவர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.

தமிழநாட்டில் MSMEகளின் தொழில்நுட்பம் பயன்பாடு மற்றும் டிஜிட்டல் மாற்றத்தை (Digital Transformation) மேம்படுத்த ஒன்றிய அரசால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் என்ன? என்றும் கேள்வி எழுப்பினார்.

banner

Related Stories

Related Stories