தமிழ்நாடு

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு இரயில்கள்... சென்ட்ரலில் இருந்து எங்கெல்லாம் இயங்குகிறது? - விவரம்!

ரம்ஜான் பண்டிகையை ஓட்டி சிறப்பு இரயில்கள் இயக்கப்படும் என தென்னக இரயில்வே தெரிவித்துள்ளது.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு இரயில்கள்... சென்ட்ரலில் இருந்து எங்கெல்லாம் இயங்குகிறது? - விவரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஆண்டுதோறும் ரம்ஜான் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம். உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இந்த பண்டிகையானது, பல நாடுகளில் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படும். அந்த வகையில் இந்தியாவில் இந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி கொண்டாப்படுகிறது. இதனை முன்னிட்டு தெற்கு இரயில்வே சார்பில் சிறப்பு இரயில்கள் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த விவரம் வருமாறு :

சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து போத்தனூர் வரை இந்த சிறப்பு இரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 30-ம் தேதி சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து இரவு 11.20 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு இரயிலானது, அடுத்த நாள் காலை 8 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.

வருகின்ற 31 ஆம் தேதி போத்தனூர் இரயில் நிலையத்தில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயிலானது அடுத்த நாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் இந்த இரயிலானது அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக போத்தனூர் இரயில் நிலையம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு இரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியதாக தென்னக இரயில்வே தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories