தமிழ்நாடு

இருமொழிக் கொள்கை - தி.மு.க நிலைபாடு : The Wire இணைய தளத்தில் ஒன்றிய அரசுக்கு பாடம் எடுத்த அமைச்சர் PTR!

இருமொழிக் கொள்கை குறித்த திமுக மற்றும் தமிழ்நாடு அரசின் நிலைபாட்டை The Wire இணைய தளத்தில் அமைச்சர் பி.டி.ஆர் தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார்.

இருமொழிக் கொள்கை - தி.மு.க நிலைபாடு : The Wire இணைய தளத்தில் ஒன்றிய அரசுக்கு பாடம் எடுத்த அமைச்சர் PTR!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அமைச்சர் பழனிவேல் தியாக​ராஜன் The Wire இணைய தளத்திற்காக மூத்த பத்திரிகையாளர் கரண் தாப்பருக்கு அளித்துள்ள பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள பதில்கள் இருமொழிக் கொள்கை குறித்த திமுக மற்றும் தமிழ்நாடு அரசின் நிலைபாட்டை தெள்ளத் தெளிவாக விளக்குவதாக உள்ளது.

அந்த பேட்டியில் அமைச்சர் பழனிவேல்தியாக​ராஜன்,” உத்தரபிரதேசத்தில் எத்தனை குழந்தைகளுக்கு 3 மொழிகள் தெரியும்?. பீகாரில் எத்தனை குழந்தைகளுக்கு 3 மொழிகள் தெரியும்? உத்தரபிரதேசத்தில் எத்தனை குழந்தைகளுக்கு 3 மொழிகள் தெரியும்?

ஒவ்வொரு குழந்தையும் 3 மொழிகளைக் கற்க முடியும் என்ற அருமையான யோசனை உங்களிடம் இருப்பதால் கடந்த 75 ஆண்டுகளாக நம் நாட்டில் என்ன பலன் கிடைத்துள்ளது?. நம் குழந்தைகளில் எத்தனை சதவீதம் பேர் 2 மொழிகளில் அற்புதமாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர்?.

குழந்தைகள் கற்றுக்கொள்வதில் அற்புதமான திறமைசாலிகள் என்று நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?. இதில் ஏதேனும் உண்மை என்பதைக் காட்டும் ஆதாரங்கள் உள்ளதா?. இரு மொழி கொள்கையை நாங்கள் ஏன் விரும்புகிறோம் என்பதில் தெளிவாக உள்ளோம்.

இன ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், எங்களுக்கு அற்புதமான முடிவுகளைத் தந்த அணுகுமுறை இது. மும்மொழிக்கொள்கை சிறந்த பலன்களைத் தந்த ஒரு மாநிலத்தை இடத்தைச் சொல்லுங்கள். வேறு ஒருவரின் நலனுக்காக எங்களின் கொள்கையில் இருந்துநாங்கள் ஏன் விலக வேண்டும் என்பதை எனக்கு விளக்குங்கள்" என சரமாரியாக கேள்விகளை முன்வைத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories