தமிழ்நாடு

”தந்தை பெரியாரை யாராலும் வீழ்த்த முடியாது” : கனிமொழி MP பேச்சு!

தந்தை பெரியாரை யாராலும் வீழ்த்த முடியாது என கனிமொழி எம்.பி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

”தந்தை பெரியாரை யாராலும் வீழ்த்த முடியாது” : கனிமொழி MP பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி ஆலோசனை கூட்டம், கழக பொறுப்பாளர் பொன். கௌதமசிகாமணி தலைமை நடைபெற்றது. இதில் கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி, அமைச்சர் பொன்முடி ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் பேசிய கனிமொழி எம்.பி,” பெண்களின் உரிமைளை பெற்றுக்கொடுத்த ஒரே இயக்கம் தி.மு.கதான். நீதிக்கட்சி ஆட்சியில் தான் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. இன்றைக்கு பெண்கள் 50% உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடலாம் என தமிழகத்தில் மட்டுமே சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இன்னும் கூட பல்வேறு நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமை இல்லை.

எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் சாதனை திட்டங்களான மகளிர் உரிமைத்தொகை, திருமண உதவித் திட்டம், புதுமைப்பெண் திட்டம், இலவசப் பேருந் பயணம் உள்ளிட்ட தீட்டங்களை நீங்கள் வீடு வீடாக எடுத்துச் செல்ல வேண்டும்.

யாராலும் பெரியாரை வீழ்த்தவோ வெல்லவோ முடியாது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெண்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தந்தை பெரியார். தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் திருக்குறள் தெரியும் ஆனால் தமிழ்நாட்டிற்கு தேவையானது நிதி மட்டுமே என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories