தமிழ்நாடு

கோயம்புத்தூரில் எய்ம்ஸ் மருத்துவமனை? : மாநிலங்களவையில் வில்சன் MP கேள்வி!

கோயம்புத்தூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஒன்றிய அரசு ஆராய்ந்துள்ளதா என வில்சன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.

கோயம்புத்தூரில் எய்ம்ஸ் மருத்துவமனை? : மாநிலங்களவையில் வில்சன் MP கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் கோரியபடி, கோயம்புத்தூரில் புதிய எய்ம்ஸ் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஒன்றிய அரசு ஆராய்ந்துள்ளதா என மாநிலங்கலவையில் திமுக எம்.பி. பி. வில்சன் இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்போது பேசிய அவர், ஆக்ஸ்பாம் இந்தியா 2022இன் படி, 70 சதவீத கிராமப்புற சமூக சுகாதார மையங்கள் (CHC) முழு அளவிலான சிறப்பு மருத்துவர்களை கொண்டிருக்கவில்லை, 83 சதவீதம் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இல்லாமல் செயல்படுகின்றன, 75 சதவீதம் மகப்பேறு மருத்துவர்கள் இல்லாமலும் 82 சதவீதம் மருத்துவர்கள் இல்லாமலும் செயல்படுகின்றன.

நகர்ப்புற சமூக சுகாதார மையங்களும் சிறப்பு மருத்துவர்கள் கிடைப்பதில் 45 சதவீதம் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன என்கின்றது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை" என சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோல் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனாவின் கீழ் வெளிநோயாளர் பராமரிப்பு, நோய் கண்டறிதல் மற்றும் மருந்துகளுக்கான தொகையை காப்பீட்டில் சேர்க்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

banner

Related Stories

Related Stories