காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி காலமானார். இதைத்தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக சட்டப்பேரவைச் செயலகம் அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8 ஆம் தேதியும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலில் தி.மு.க சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். எதிர்க்கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்த நிலையில், சில சிறிய கட்சிகள் மட்டுமே இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து பிப்.5 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பின்னர் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது.
பிறகு வாக்கு எத்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தற்போது முதல் சுற்று முடிந்து இரண்டாவது சுற்று எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில் 18,873 வாக்குகளுடன் தி.மு.க வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் முன்னிலையில் உள்ளர். நாம் தமிழர் வேட்பாளர் கடும் பின்னடைவை சந்தித்து வருகிறார்.