தமிழ்நாடு

ECR விவகாரம் : 6 இளைஞர்கள் கைது - 2 கார்கள் பறிமுதல்!

சென்னை ஈ.சி.ஆர் விவகாரம் தொடர்பாக 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ECR விவகாரம் : 6 இளைஞர்கள் கைது  - 2 கார்கள் பறிமுதல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் சென்ற காரை பின் தொடர்ந்து சென்ற விவகாரத்தில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கில் ஒரு கல்லூரி மாணவர் உள்ளிட்ட இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட மாணவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருபவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய மேலும் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைதானவர்களை தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories