காஞ்சிபுரம் மாவட்டம், கீழ்படப்பை பகுதியைச் சேர்ந்தவர் பொன்னம்பலம். இவர் அ.தி.மு.க கட்சியில் குன்றத்தூர் ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், பொன்னம்பலத்திற்கு சொந்தமான வீட்டில் இளம் பெண்கள் வாடகைக்கு தங்கி வேலைக்கு சென்று வந்தனர். இவர்களுக்கு பொன்னம்பலம் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதனால், இப்பெண்கள் அங்கிருந்து வீட்டை காலி செய்து வேறு இடத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர். இருந்தும் பொன்னம்பலம் அவர்களுக்கு தொலைபேசியில் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
மேலும், அப்பெண்கள் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று அவர்களுக்கு மிரட்டல் விடுத்து தொல்லை கொடுத்துள்ளார். இதை அப்பெண்கள் வீடியோ ஆதாரமாக எடுத்துள்ளனர்.
பின்னர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்கு பதிவு செய்து அ.தி.மு.க நிர்வாகி பொன்னம்பலத்தை கைது செய்தனர். வீட்டில் வாடகை இருந்த பெண்களுக்கு அ.தி.மு.க நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.