தமிழ்நாடு

பா.ஜ.க அரசை ஏன் சீமான் கண்டிப்பதில்லை? : தொல்.திருமாவளவன் கேள்வி!

சிறுபான்மை மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் ஒன்றிய பா.ஜ.க அரசை ஏன் சீமான் கண்டிப்பது இல்லை? என தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பா.ஜ.க அரசை ஏன் சீமான் கண்டிப்பதில்லை? :  தொல்.திருமாவளவன் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

”இஸ்லாமியர்களுக்கு எதிரான வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா குறித்து சீமான் ஏன் இதுவரை பேசவில்லை?. சிறுபான்மை மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் ஒன்றிய பா.ஜ.க அரசை ஏன் சீமான் கண்டிப்பது இல்லை?” என வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த தொல்.திருமாவளவன், ”இந்தியா முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகளின் நம்பிக்கைக்குரிய தலைவர் தந்தை பெரியார். இவர்தான் தமிழ்நாட்டில் சனாதன சக்திகளை வேரூன்ற விடாமல் விரட்டியடித்து வருகிறார். அவரை கொச்சைப்படுத்தி பேசுவது ஏற்புடையதல்ல. இந்த போக்கை சீமான் கைவிட வேண்டும்.

இஸ்லாமியர்களுக்கு எதிரான வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா குறித்து சீமான் ஏன் இதுவரை பேசவில்லை?. சிறுபான்மை மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் ஒன்றிய பா.ஜ.க அரசை ஏன் சீமான் கண்டிப்பது இல்லை?.

மக்களுக்காக பேசப்பட வேண்டிய பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கிறது. ஆனால் பரபரப்புக்காக பேசி வருகிறார் சீமான். தன்னை நம்பி வரும் இளைஞர்களின் உணர்ச்சிகளை அரசியலுக்காக பயன்படுத்தவே இப்படி சீமான் பேசி வருகிறார்.” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories