தமிழ்நாடு

துணை முதல்வர் உடனடியாக தலையிட்டு பிரச்னைகளை சரிசெய்தார் - பஞ்சாபில் இருந்து திரும்பிய கபடி வீராங்கனைகள் !

பஞ்சாபில் நடத்த பிரச்னையின்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வர்கள் உடனடியாக தலையிட்டு பிரச்சனைகளை சரிசெய்தார் என கபடி வீராங்கனைகள் கூறியுள்ளனர்.

துணை முதல்வர் உடனடியாக தலையிட்டு பிரச்னைகளை சரிசெய்தார் - பஞ்சாபில் இருந்து திரும்பிய கபடி வீராங்கனைகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

2024-2025 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்கள் கபடி போட்டி பஞ்சாபில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 24-ம் தேதி நடைபெற்ற போட்டியில் மதர் தெரசா பல்கலைக்கழகத்திற்கும், தர்பங்கா பல்கலைக்கழகத்திற்கும் இடையேயான கபடி போட்டியில் கைகலப்பு ஏற்பட்டது.

எதிர் அணியினர் மதர் தெரசா பல்கலைக்கழக அணியின் வீராங்கனை மீது பவுல் அட்டாக் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மதராஸா பல்கலைக்கழக வீராங்கனைகள் நடுவரிடம் இது குறித்து முறையிட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது எதிர் அணியினருடன் சேர்ந்து நடுவர் வீராங்கனை தாக்கியதாக சொல்லப்படுகிறது.இதனால் இரு அணிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டு நாற்காலிகளை தூக்கி சண்டையிட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

துணை முதல்வர் உடனடியாக தலையிட்டு பிரச்னைகளை சரிசெய்தார் - பஞ்சாபில் இருந்து திரும்பிய கபடி வீராங்கனைகள் !

இந்த விவகாரத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு தமிழக வீராங்கனைகள் பத்திரமாக சென்னை திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி கபடி வீராங்கனைகள் டெல்லி அழைத்துவரப்பட்டு, அங்கிருந்து ரயில் மூலம் இன்று சென்னை திரும்பினர். சென்னை திரும்பியவர்கள் எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்கள்.

அப்போது பேசிய அவர்கள், "அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கபடி போட்டிக்குத் தமிழகத்திலிருந்து நான்கு பல்கலைக்கழகங்கள் தேர்வாகியிருந்தோம். அழகப்பா, பெரியார், மதர் தெரசா, பாரதியார் பல்கலைக்கழக அணிகள் தேர்வாகியிருந்தது. பெரியார் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகங்கள் விளையாடிய போட்டி ஒரு தலைப்பட்சமாக இருந்ததால் அவர்கள் வெளியேறி விட்டார்கள்.

மதர் தெரசா மகளிர் பல்கலைக்கழகம் மட்டும் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. காலிறுதிப் போட்டி முடிவதற்கு ஐந்து நிமிடங்கள் இருந்தபோது, நமது வீராங்கனை ரெய்டு சென்றிருந்தார். அப்பொழுது எதிர் தரப்பு வீராங்கனைகள் அவரைத் தாக்க முயற்சி செய்தார்கள். நமது வீராங்கனை தற்காப்பிற்காக செயல்படப்போனபோது அவர்கள் அனைவரும் சேர்ந்து தாக்கினார்கள். அதனால் ஐந்து நிமிடம் அங்கு கைகலப்பு ஏற்பட்டது.

துணை முதல்வர் உடனடியாக தலையிட்டு பிரச்னைகளை சரிசெய்தார் - பஞ்சாபில் இருந்து திரும்பிய கபடி வீராங்கனைகள் !

பஞ்சாபில் நாங்கள் பாதுகாப்பின்மையாக உணர்ந்த போது உடனடியாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடமிருந்து அழைப்பு வந்தது. அதற்குப் பிறகு அங்கிருந்து காவல்துறை அதிகாரிகள் எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க ஆரம்பித்தார்கள். தமிழ்நாட்டை சேர்ந்த கபடி வீராங்கனைகளுக்காக துணை முதலமைச்சர் அழைத்து பேசியது நம்பிக்கை அளித்தது.

பஞ்சாபில் நடந்த பிரச்னை குறித்து உடனடியாக துணை முதலமைச்சர் உதயநிதிக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் அவர் இங்குள்ள அதிகாரிகளிடம் பேசியதும், துரிதமாக அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு காவல்நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்ட எங்கள் பயிற்சியாளர் விடுவிக்கப்பட்டார். தமிழ்நாடு அரசு எங்களுக்கு உதவியாக இருந்து பத்திரமாக எங்களை இங்கு அழைத்து வந்துள்ளது.அங்கிருந்து கிளம்பி டெல்லி சென்றடைந்தோம், அங்கு தமிழ்நாடு மாளிகையில் எங்களுக்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. ஐந்து நிமிடம் பதட்டமான சூழ்நிலை நிலவியது. தமிழக அரசின் சரியான நடவடிக்கையால் அனைத்தும் சீராகிவிட்டது.வீராங்கனைகள் அனைவரும் தற்போது பாதுகாப்பாக உணர்கிறோம்"என்று தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories